அறிவியல் / தொழில்நுட்பம்

புதிய அம்சம் அறிமுகம். ஜிமெயில் பயனர்கள் மகிழ்ச்சி.

கிரி கணபதி

OpenAi நிறுவனத்தின் ChatGPT வருகைக்குப் பிறகு, கூகுள் நிறுவனமும் தன்னால் முடிந்த அளவுக்கு எல்லா வகையான AI அம்சங்களையும் வெளியிட்டு வரும் வண்ணம் உள்ளது. அதில் புதிதாக அவர்கள் வெளியிட்டுள்ள 'ஹெல்ப் மீ ரைட்' என்கிற ஜிமெயிலில் பயன்படுத்தும் புதிய அம்சம், மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

அதாவது சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ஹெல்ப் மீ ரைட் என்பது கஷ்டமில்லாமல் மிகவும் எளிய முறையில் இமெயில்களை உருவாக்க உதவும் ஒரு ஏஐ கருவியாகும். நீங்கள் உள்ளீடு செய்யும் ஒரு சில வார்த்தைகளை அடிப்படையாக வைத்து, ஹெல்ப் மீ ரைட் ஏஐ அம்சம் உங்களுக்கான பல மாதிரியான இமெயில்களை அதுவே எழுதிக் கொடுக்கும். 

அதில் எது உங்களுக்குப் பொருத்தமாக இருக்கிறதோ அதை நீங்கள் தேர்வு செய்து, மற்றவர்களுக்கு விரைவாக இமெயில் அனுப்பலாம். கேட்பதற்கே சுவாரசியமாக இருக்கும் இந்த புதிய அம்சம், வின்டோஸ் டெஸ்க்டாப் வெர்ஷனில் தற்போது அனைவருக்கும் அணுகக் கிடைக்கிறது. இது மொபைல் ஃபோனிலும் பயன்படுத்தும் படியாக தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதாவது சமீபத்திய ஆண்ட்ராய்டு மற்றும் iOs ஜிமெயில் செயலிகளில் இந்த ஹெல்ப் மி ரைட் அம்சம் அனைவருக்கும் அணுகக் கிடைக்கிறது. 

ஒரு ஈமெயிலை எழுதும்போது, கீழ் வலது மூலையில் தோன்றும் ஹெல்ப் மீ ரைட் என்ற பட்டனை கிளிக் செய்தால் 'கிரியேட்' என்கிற பட்டனுடன், 'பிராம்ப்ட்' என்பதும் தோன்றும். அதில் நீங்கள் எது போன்ற இ-மெயிலை உருவாக்க விரும்பீர்களோ, அது தொடர்பான சில வரிகளை உள்ளீடு செய்து, கிரியேட் என்கிற பட்டனை கிளிக் செய்தால், உங்களுக்கான இமெயிலை அதுவே எழுதிக் கொடுத்துவிடும். ஒருவேளை உங்களுக்கு அந்த இமெயில் பிடிக்கவில்லை என்றாலும் ரீபைன்ட் என்கிற பட்டனைத் தேர்வு செய்து, மேலும் சிறப்பாக இமெயிலை மாற்றலாம். 

இறுதியாக இந்த ஏஐ அம்சத்தால் உருவாக்கப்பட்ட மெயில் உங்களுக்கு திருப்திகரமாக இருப்பின், Insert என்கிற விருப்பத்தைக் கிளிக் செய்து sent என்பதைக் கிளிக் செய்தால், நீங்கள் உருவாக்கிய மெயில் அனுப்ப விரும்பிய நபருக்கு சென்றுவிடும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், அதனுடைய Prompt-ல் சரியான வார்த்தைகளை உள்ளீடு செய்வது மட்டுமே. மீதி வேலைகளை 'ஹெல்ப் மீ ரைட்' பார்த்துக் கொள்ளும். 

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

SCROLL FOR NEXT