அறிவியல் / தொழில்நுட்பம்

iQOO Neo 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் சுடச் சுட அறிமுகம்.

கிரி கணபதி

iQOO என்பது சீனாவைச் சேர்ந்த VIVO நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆகும். இந்தியாவில் ஸ்மார்ட்போன் பிராண்டுகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. இதில் புதியதாக ஒரு பிராண்ட் உள்ளே வந்து தனக்கான அங்கீகாரத்தை பெறுவது மிகவும் கடினம். சில ஆண்டுகளுக்கு முன்பு Realme நிறுவனம் புதியதாக உள்ளே என்ட்ரி கொடுத்து, மக்கள் மத்தியில் மிகப்பெரிய நற்பெயரை சம்பாதித்தது. அதே போல தான் iQOO நிறுவனமும் மக்கள் மத்தியில் தனக்கான நற்பெயரை சம்பாதித்துள்ளது. 

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி, 15000 நபர்களிடம் உங்களுக்குப் பிடித்த ஸ்மார்ட்போன் பிராண்ட் எது என்ற கேள்விக்கு, பல முன்னணி பிராண்டுகளின் வரிசையில் iQOO ஸ்மார்ட்போனின் பெயரும் இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 2.7 சதவீத மக்கள் இந்தியாவில் இந்நிறுவன ஸ்மார்ட்போன் பயன்படுத்தினார்கள். இப்போது 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 2.4 சதவீத வளர்ச்சியை இந்த ஆண்டு iQOO நிறுவனம் அடைந்துள்ளது. 

2022ல் இந்தியாவில் வெளியான iQOO Neo 6 என்ற ஸ்மார்ட்போன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதன் தொடர்ச்சியாக iQOO Neo 7 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு கிட்டத்தட்ட iQOO Neo 6 போலவே இருக்கும் இந்த ஸ்மார்ட்போன், தொழில்நுட்ப ரீதியாக பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் விலை மற்றும் இதனுடைய சிறப்பம்சங்கள்:

6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், 5000mah சக்தி கொண்ட பேட்டரியும், அதற்கு எதுவாக 120W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன் உள்ளது. 

ரெபிரஷேட்டை- 120Hz.

பிக்சல் - ஃபுல் ஹெச்டி+ (2400×1080 Pixels).

OIS என்ற புதிய தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய 64MP ப்ரைமரி கேமரா இருக்கிறது. 

iQOO Neo 6 போனானது  குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசசர் கொண்டு வெளியான நிலையில், Neo 7 ஸ்மார்ட்போனில் Mediatek Dimensity 8,200 Soc பிராசசர் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இது பல புதிய வண்ணங்களில் வெளிவந்துள்ளது. குறிப்பாக Interstellar Black மற்றும் Frost Blue வண்ண டிசைன்களிலும் கிடைக்கும். இதற்கு முன்னர் வெளியான ஃபோன்களில் பெரும்பாலும் கருப்பு நிறம் இருந்த நிலையில், தற்போது அது நீல நிறமாக மாற்றப்பட்டுள்ளது.  

ரூபாய் 29,999க்கு, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட் போன் கிடைக்கிறது. அதுவே 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட போனின் விலை ரூபாய் 33,999/-

மேலும், குறிப்பிட்ட சில வங்கிகள் மூலமாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால், உடனடி தள்ளுபடியாக 1500 பெறலாம். 

கூடுதல் அம்சமாக, இந்த ஸ்மார்ட்போன் எவ்வளவு அதிகமாக பயன்படுத்தினாலும், அதிக சூடாகாமல் குளிர்ச்சியாக இருக்க, கிராஃபைட் தாள்கள் பல அடுக்குகளில் உள்ளே பதிக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த Neo 7ல் மொத்தம் 11 விதமான 5G Band-கள் உள்ளன. எனவே வெவ்வேறு விதமான 5G நெட்வொர்க்களையும் நீங்கள் பல்வேறு இடங்களில் இருந்தாலும் பெற முடியும். இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் நேற்றுதான் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

எண்ணெய் தடவாமல் கூந்தலை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!

மகிழ்ச்சி என்பது தாற்காலிகமானதா நிரந்தரமானதா?

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

SCROLL FOR NEXT