பூமியில் மனிதர்கள் இருப்பது போலவே வேற்றுகிரகங்களில் ஜீவராசிகள் இருப்பது போன்று காட்டுவதை பல ஹாலிவுட் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் எதிர்காலத்தில் மனிதர்களே வேற்றுகிரகத்தில் வாழும் வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களால் வேற்று கிரகத்தில் மனிதர்கள் காலனி அமைத்து வாழும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் சாத்தியக்கூறுகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
செவ்வாய் காலனித்துவம் : மனிதர்கள் வேற்று கிரகத்தில் காலனி அமைத்து வாழ்வதாக இருந்தால், அது செவ்வாய் கிரகமாக தான் இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் அனுமானமாக உள்ளது. குறிப்பாக நாசா மற்றும் ஸ்பேஸ் X போன்ற தனியார் நிறுவனங்கள் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். செவ்வாய் கிரகத்தின் கடுமையான சூழல் மற்றும் நீண்ட கால பயணம் போன்றவை சவால்கள் மிக்கதாக இருந்தாலும், அதை சாத்தியமாக்கும் வகையில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
சந்திரக் குடியிருப்பு: நிலவு மனிதர்கள் குடியேறுவதற்கான அடுத்த சாத்தியமான இடமாகப் பார்க்கப்படுகிறது. சந்திரனில் ஒரு தளத்தை அமைத்து மனிதர்களை குடியேற்றுவது செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதை விட எளிதானது என்பதால், இதற்கான ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனாலையே நாசாவின் ஆர்க்கிமிடிஸ் திட்டம் மனிதர்களை நிலவுக்கு அனுப்பி அங்குள்ள நிலையை கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
செவ்வாய் மற்றும் சந்திரனுக்கு அப்பால்: செவ்வாய் மற்றும் சந்திரனுக்கு அப்பால், வியாழனின் நிலவு மற்றும் வெள்ளியின் நிலவு போன்ற பிற கோள்களுயும் மனிதர்கள் வாழ்வதற்கு தகுந்த இடமாக கருத்தில் கொள்ளப்படுகிறது. அந்த கிரகங்களில் நிலத்தடி கடல்கள் மற்றும் அதன் தனித்துவமான நிலைகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதால், அங்கு மனிதர்களால் வாழ முடியும் என யூகிக்கின்றனர். எனவே இந்த இடங்களிலும் எதிர்காலத்தில் மனிதர்களின் குடியிருப்பு சாத்தியமாகப் பார்க்கப்படுகிறது.
இத்தகைய இடங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என்றாலும், இதற்காக நாம் சில சவால்களை கடக்க வேண்டியுள்ளது. அதாவது பிற கோள்களில் உள்ள கடுமையான சூழல்கள், மனிதர்களின் உளவியல் பிரச்சனைகள் மற்றும் சட்ட சிக்கல்கள் போன்றவை மனிதர்கள் வேற்று கிரகங்களில் குடியமர்த்தப்படும்போது கவனிக்க வேண்டியவை ஆகும். இருப்பினும் மனிதர்கள் வேற்று கிரகத்தில் வாழ்வதற்கான எல்லா முயற்சிகளையும் விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் உள்ள எல்லா தடங்கல்களையும் நிவர்த்தி செய்த பிறகு, மனிதர்கள் நிச்சயம் வேற்று கிரகத்தில் வாழ்வார்கள் என நம்பப்படுகிறது.