இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் என்பது நம் அனைவரது வாழ்விலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்மார்ட்போன் இல்லாத வாழ்க்கையை இப்போது நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது என்ற நிலைக்கு நாம் வந்து விட்டோம். காலையில் எழுவது முதல், இரவு தூங்குவது வரை, எல்லா நேரங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் நம் கையிலே இருக்கிறது. மேலும் நமது அன்றாட செயல்பாடுகளைக் கட்டமைக்கும் எல்லா விதமான செயலிகளும் ஸ்மார்ட்போனில் வந்துவிட்டது.
இதைப் பயன்படுத்தி இருக்கிற இடத்தில் இருந்துகொண்டே சகல விஷயங்களையும் நாம் செய்து கொள்ளலாம். இப்படி பல விதங்களில் நமக்கு பயன்படும் ஸ்மார்ட்போன் திடீரென ஸ்லோவாக இயங்கினால் நமக்கு எப்படி இருக்கும்? உண்மையிலேயே அந்த உணர்வை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பயன்படுத்திக் கொண்டிருக்கும்போதே மெதுவாக செயல்படுவது, அல்லது Hang ஆகி அப்படியே நிற்பது போன்றவற்றால், பல நேரங்களில் எரிச்சலடையும் நபராக நீங்கள் இருந்தால், அதை சரி செய்வதற்கான செம டிப்ஸ் இந்த பதிவில் பார்க்கலாம்.
1. உங்கள் போன் திடீரென ஸ்லோவாக இயங்குவது போல் தெரிந்தால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் மொபைலை உடனடியாக ரீஸ்டார்ட் செய்யுங்கள். இதன் மூலமாக உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள முதல்நிலை பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும்.
2. உங்கள் போன் ஸ்லோவாக இயங்கினால், அது லேட்டஸ்ட் அப்டேட்டில் இருக்கிறதா என சரி பாருங்கள். ஸ்மார்ட்போன்கள் லேட்டஸ்ட் அப்டேட்டில் இல்லாத போதும் ஸ்லோவாக இயங்கும் வாய்ப்புள்ளது. பழைய அப்டேட்களில் உள்ள Malware-கள் காரணமாக ஸ்மார்ட்போனின் performance குறையும்.
3. அடுத்ததாக உங்கள் ஸ்மார்ட் போனில் ஸ்டோரேஜ் ஃபுல் ஆகிவிட்டதா என பாருங்கள். ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் நிறைந்துவிட்டாலும் சாதனத்தின் இயக்கம் குறையும். முடிந்தவரை தேவையற்ற பைல்களை டெலிட் செய்து விடுங்கள். குறைந்தது 40 சதவீத ஸ்டோரேஜை எப்போதும் காலியாக வைத்திருக்கவும். நீங்கள் பயன்படுத்தாத செயலிகளை நீக்கிவிடுவது நல்லது.
4. குறிப்பாக உங்களுக்குத் தெரியாத செயலிகள், வைபை போன்றவற்றை ஸ்மார்ட் போனில் பயன்படுத்தாதீர்கள். இதன் மூலமாக உங்கள் சாதனம் ஹேக் செய்யப்பட்டு பாதிப்புகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது.
5. இறுதியாக உங்கள் ஸ்மார்ட்போனில் வேகத்தைக் கூட்ட விரும்பினால், ஒருமுறை ஃபேக்டரி டேட்டா ரீசெட் செய்து பாருங்கள். இதன் மூலமாக உங்கள் ஸ்மார்ட் போன் புதிதாக வாங்கும்போது எப்படி இருந்ததோ அப்படி மாறிவிடும். ஆனால் இதை செய்வதற்கு முன்பு ஃபோனில் உள்ள முக்கியமான கோப்புகள் அனைத்தையும் வேறு சாதனத்தில் சேமித்துக் கொள்வது நல்லது.
இவை அனைத்தையும் முயற்சித்துப் பார்த்தால் ஏதோ ஒரு வழிமுறையில் நிச்சயம் உங்கள் சாதனம் வேகமாக இயங்கத் தொடங்கிவிடும்.