கூகுள் மேப்பில் லைவ் லொகேஷன் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய மக்களின் பெரும்பான்மையான பயணங்களில் முக்கிய பங்காற்றுவது கூகுள் மேப் செயலி. இதன் மூலம் செல்லும் இடத்திற்கான வழித்தடத்தை மக்கள் சரியான நேரத்தில், எவ்வித தடையும் இன்றி செல்ல இந்த செயலி உதவுகிறது.
இந்த நிலையில் வாட்ஸ் அப் மூலமாக பலரும் தங்கள் லைவ் லொகேஷனை பகிர்ந்து, அதை கூகுள் மேப் வழியாக அடையாளம் கண்டு செல்லும் வழிகளை தெரிந்து தங்களுடைய பயணத்தை அமைத்துக் கொண்டிருந்தனர். அவற்றிற்கு மாற்றாக இனி கூகுள் மேப் செயலின் மூலமாகவே லைவ் லொகேஷனை பிறருக்கு பகிர முடியும். இதன் மூலம் மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை தற்போது கூகுள் மேப் செயலி நிறைவேற்றி இருக்கிறது.
கூகுள் மேப்பின் லைவ் லொகேஷனை அம்சத்தை வாட்ஸ் அப், டெலிகிராம், இமெயில் வழியாகவும் பிறருக்கு பகிர முடியும். அதோடு லைவ் லொகேஷனை எவ்வளவு நேரம் பிறருக்கு காட்ட வேண்டும் என்பதையும் சம்பந்தப்பட்ட நபர் பதிவு செய்து கொள்ள முடியும். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு லைவ் லொகேஷனை பிறருக்கு காட்டுவதை நிறுத்த முடியும்.
லைவ் லொகேஷன் பயன்பாட்டை கூகுள் மேப்பில் பெற கூகுள் மேப்பில் உள்ள ப்ரோபைல் பக்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கு லோகேஷன் ஷேர் என்ற அம்சம் கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்து, ஷேர் லொக்கேஷனை தேர்வு செய்து, எவ்வளவு நேரம் லொகேஷன் பகிர வேண்டும் என்பதை பதிவு செய்து சம்பந்தப்பட்ட நம்பருக்கு பகிரலாம். மேலும் விருப்பப்படும்போது லொகேஷன் ஷேரிங்கை நிறுத்த முடியும். இந்த அம்சம் மேலும் கூகுள் மேப் பயன்பாட்டை மக்கள் மத்தியில் மேலும் விரிவடைய செய்யும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.