அறிவியல் / தொழில்நுட்பம்

Mac யூசர்கள் ஜாக்கிரதையா இருங்க!

கிரி கணபதி

Apple Mac பயன்படுத்துபவர்களின் தகவல்கள் Atomic macOS Stealer (AMOS) என்கிற மால்வேர் மூலமாக சமீப காலமாக திருடப்பட்டு வருகிறது. இந்த மால்வேரானது டெலிகிராம் செயலி மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருவதால், ஆப்பிள் பயனாளர்கள் பயத்தில் உள்ளனர். 

ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான சாதனங்களில் மேக் ஓ எஸ் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. என்னதான் நிறுவனம் தரப்பிலிருந்து இதை ஹேக் செய்வது கடினம் எனக் கூறினாலும், இதை ஹேக் செய்ய ஹேக்கர்கள் பல்வேறு விதங்களில் திட்டம் போட்டு வருகின்றனர். பொதுவாகவே ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களும் மிகுந்த பாதுகாப்பு கொண்டவையாகவே இருக்கும். அவற்றின் சாப்ட்வேர்கள் பல்வேறு கட்ட Firewall-களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். 

இருப்பினும் ஹேக்கர்கள் இத்தனை பாதுகாப்பு அம்சங்களையும் மீறி, உள்ளே நுழையும் படியான மால்வேர்களை உருவாக்கி ஆப்பிள் நிறுவனத்திற்கு தொடர்ந்து பிரச்சனை கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் ஆப்பிள் சாதன பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் சம்பவங்களும் நடந்துள்ளது. 

இதன் வரிசையில் தற்போது ஹாக்கர்கள் AMOS என்னும் புதிய மால்வர் மூலமாக macOS பயனர்களின் தகவல்களைத் திருடி வருகின்றனர். குறிப்பாக, இந்த மால்வேரை யார் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளும் படியாக, டெலிகிராமில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த மால்வேர் மூலமாக ஆப்பிள் சாதன யூசர்களின் பாஸ்வேர்ட், குக்கீஸ், வாலெட் டேட்டா கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றின் விவரங்களைத் திருட முடியும். இதனை Telegram செயலி வாயிலாக ஏராளமானோர் இந்த மால்வேரை வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. 

இதனால், ஆப்பிள் யூசர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். இந்தச் செய்தியை சைபுல் ஆராய்ச்சி மற்றும் நுண்ணறிவு ஆய்வகம் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மால்வர் மிகவும் ஆபத்தானது என்றும் எச்சரித்துள்ளனர். 

மேக் யூஸர்கள் எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வது?

மேக் யூசர்கள் இந்த மால்வேரின் தாக்குதலிலிருந்து தப்பிக்க, தனது பிரவுசர்களில் நம்பத்தகுந்த பாதுகாப்பான இணையதளங்களை மட்டுமே பயன் படுத்த வேண்டும். மேலும் வெப்சைட் குக்கீக்களை அவ்வப்போது கிளியர் செய்துவிட வேண்டும். ரியல் டைம் ஆன்ட்டி மால்வேர் மென்பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக பலதரங்களில் தோன்றும் தேவையற்ற லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் சொல்லப்படுகிறது.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT