A building img Credit: Business Insider
அறிவியல் / தொழில்நுட்பம்

உங்கள் கட்டடத்தை எந்த ஒரு சேதமும் இன்றி நகர்த்த வேண்டுமா? அதற்கென்று தொழில்நுட்பம் உள்ளதா?

A.N.ராகுல்

ஒரு கட்டடத்தை ஒர் இடத்திலிருந்து நகர்த்துவதை கட்டட இடமாற்றம்(building relocation) என்பர். இது பல சிறப்பு நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை உள்ளடக்கிய ஒரு பிரமிக்கத்தக்க செயல்முறையாகும். இது போன்ற நுட்பங்கள் நம் ஊரிலும் பயன்படுத்தப்படுகின்றன. அதை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்

பிரித்தெடுத்தல் மற்றும் மறுசீரமைப்பு:

முதலில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது ‘கட்டடத்தை இருக்கும் இடத்தில் இருந்து வேறு எந்த இடத்திற்கு நகர்த்தி வைக்க போகிறோம்’ என்பதற்கான தெளிவான புரிதல், யோசனை மற்றும் திட்டம் இருக்க வேண்டும். இந்த முறையை செயல்படுத்தும் போது ‘சரியான வழிகாட்டுதல் குழு, திறமை வாய்ந்த தொழிலாளர்கள், பிரச்சனை ஏதேனும் ஏற்பட்டால் அதை சுலபமாக சீர் செய்யக்கூடிய வல்லுநர்கள்’ போன்றவர்கள் இந்த செயல் முடியும் வரை கூடவே இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

முழு கட்டமைப்பையும் கொண்டு செல்லுதல்:

இந்த செயல்முறையின் நோக்கமே கட்டடத்தின் அடித்தளத்தை அலேக்காக பெயர்த்தெடுத்து அதன் பின் முழு கட்டடத்தையும் எந்த ஒரு சேதாரமும் இன்றி நகற்றி வைப்பதே. அதற்கு முதலில் கட்டடத்தின் கீழ் பகுதியை உடைத்து அதில் ஸ்டீல் பிரேம்ஸ்(steel framework) கட்டிடத்தின் சப்போர்ட்காக வைக்க வேண்டும். பின் பல ஹைட்ராலிக் ஜாக்கிகளை அடித்தளத்தில் சுத்தி வைத்து தூக்க முயற்சிக்க வேண்டும். முக்கியமாக அடிப்பகுதியில் வைத்திருக்கும் ஸ்டீல் மற்றும் ஜாக்கிகள் நகராமல் இருக்க பெரிய மர கட்டைகளை கட்டடத்தின் நாலாபுறத்திலும் சப்போர்ட்டுக்கு சாய்வான கோணத்தில் நிறுத்த வைக்க வேண்டும்.

கட்டமைப்பை நகர்த்துதல்:

கொஞ்ச தூரத்திற்கு தான் நகர்த்த வேண்டும் என்றால் தற்காலிக தண்டவாளங்களை ஏற்படுத்தி வைக்கலாம். இல்லையெனில், பிளாட்பெட் டிரக்குகள்( Flat Bed Trucks ) அல்லது அதிக சக்தி மற்றும் சக்கரங்களை கொண்ட பெரிய லாரிகளை பயன்படுத்தலாம்.

கட்டடத்தை மேல தூக்கி நகர்த்தும் போது மேலே இணைக்கப்பட்டிருக்கும் மின்கம்பிகள், பெரிய பெரிய மர கிளைகள் ஆகியவற்றை கடந்து போக நேர்ந்தால் முதலில் அந்த தடைகளை ஆராய்ந்து அகற்றி கொள்ளவேண்டும். இறுதியாக திட்டம் போட்ட இடத்தில் நிலைநிறுத்தும் போது எத்தனை கவனமாகவும் நிதானமாகவும் நிலைநிறுத்தமுடியுமோ அந்த அளவிற்கு செய்ய வேண்டும்.

கட்டடங்கள் நகர்த்தும் காரணங்கள்:

நகர்ப்புறங்களில் ஆங்காங்கே நிறைய மாற்றங்கள் செய்ய படுவதால், சில வணிக ரீதியாக ஒரு சில கட்டடங்கள் நகர்த்தப்படுகின்றன. அதே போல் சில வரலாற்று சிறப்புகள் வாய்ந்த கட்டடங்களை பாதுகாப்பிற்காக நகர்த்தி வைக்கிறார்கள். ஒரு கட்டடம் இருக்கும் இடத்திற்கு அருகில் ஏதேனும் பெரிய பாலம் கட்டும் வேலைகள் நடைபெறும் போது, அதனால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க உரிமையாளரின் விருப்பத்தின் பேரில், கட்டடத்தை நகர்த்தி வைப்பதும் உண்டு.

தற்காப்பு நடவடிக்கைகள்:

இடமாற்றம் செய்வதற்கு முன் கட்டடத்தின் நிலையை மதிப்பிடுங்கள். விரிசல், பலவீனமான இடங்களில் சேதம் உள்ளதா என சரிபார்க்கவும். அப்படி பாதிக்கப்படலாம் என்று கணிக்கப்படும் பகுதிகளை முன்கூட்டியே பலப்படுத்த பாருங்கள். விபத்துகளைத் தடுக்க நீர், எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றின் தொடர்புகளை துண்டித்து விடுங்கள்.உள்ளே சுலபமாக உடையக்கூடிய அல்லது தளர்வான பொருட்கள் இருப்பின் அகற்றி விடுங்கள், இதனால் சில சேதாரங்களை நீங்கள் தவிர்க்கலாம். தீவிர வானிலை மாற்றங்கள் இருப்பின் அச்சமயங்களில் நகர்த்துவதைத் தவிர்க்க பாருங்கள்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT