வாட்ஸ்அப்  
அறிவியல் / தொழில்நுட்பம்

வாட்ஸ் அப் ப்ரைவசியில் மேலும் ஒரு புதிய அப்டேட்!

க.இப்ராகிம்

வாட்ஸ் அப் கால்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் கால்களில் மேலும் ஒரு கூடுதல் அம்சத்தை இணைத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய மற்றும் எளிய தொலைத்தொடர்பு சாதனமாக விளங்கி வருவது மெட்டா நிறுவனத்தினுடைய வாட்ஸ் அப் செயலி. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு சாதனமாக உருவெடுத்து இருக்கிறது. மக்களினுடைய பல தகவல்கள் வாட்ஸ் அப் வழியாகவே பெரும்பாலும் பரிமாறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பல தொலைத்தொடர்பு சாதனங்களை பின்னுக்கு தள்ளி இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு சாதனமாக வாட்ஸ் அப் உருவெடுத்து இருக்கிறது. இந்த நிலையில் வாட்ஸ் அப் உடைய பாதுகாப்பு குறித்த கேள்விகளும் எழுந்த வண்ணம் இருக்கிறது.

இந்த நிலையில் மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பின் பாதுகாப்பு அம்சங்களை அதிகப்படுத்த தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது வாட்ஸ் அப் ப்ரைவசியில் கூடுதல் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் கால்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தற்போது புதிதாக பிரோடக்ட் ஐ பி அட்ரஸ் என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாட்ஸ் அப் காலங்களுடைய பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் பயனாளரின் பெயர், ஐபி அட்ரஸ், லொகேஷன் ஆகியவற்றை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இவை சோதனை முயற்சியில் தற்போது சில ஃபோன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு வகை ஃபோன்களில் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்த வாட்ஸ் அப் செட்டிங்ஸ் சென்று ப்ரைவசியை கிளிக் செய்து, நியூ அட்வான்ஸை தேர்வு செய்து, எனெபிள் செய்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT