இனி google-ளின் கதை அவ்வளவுதான். ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை வெளியிட்டு பிரபலமடைந்த AI நிறுவனமான OpenAI, கூகுளுக்கு நிகரான சர்ச் என்ஜினை அறிமுகம் செய்யவுள்ளது. இது முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் ஒரு அதிநவீன தேடுபொறியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சர்ச் இஞ்சினுக்கு google.com போல search.chatgpt.com என டொமைன் பெயர் இருக்கும் என்றும், இது வருகிற மே 9ம் தேதி, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த முன்னேற்றத்திற்கு OpenAI நிறுவனத்தின் சிஇஓ Sam Altman பெரும் பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், விரைவில் உண்மையாகிவிடும் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் பிரபல இன்ஃப்ளூன்ஸராக இருக்கும் பீட் என்பவரின் பதிவின் படி, வருகிற மே ஒன்பதாம் தேதி கட்டாயம் ChatGPT தேடுபொறியின் வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இனிவரும் நாட்களில் இதுகுறித்த அறிவிப்புகளையும் நாம் எதிர்பார்க்கலாம்.
முற்றிலும் புதுமையான இந்த தேடுபொறி, google போல உள்ளடக்கங்களை வைத்து செயல்படாமல், முற்றிலும் செயற்கை நுண்ணறிவுத் திறன்களுடன் இயங்கக்கூடிய ஒரு தனிப்பட்ட தேடுபொறியாகும். பயனர்கள் அவர்களின் சந்தேகங்களை இந்த தேடுபொறியில் முன் வைக்கும்போது, அதற்கான துல்லியமான பதிலையும் கொடுத்து, அந்த பதில் எங்கிருந்து பெறப்பட்டது என்ற இணைப்புகளையும் கொடுக்கும். இந்த அம்சம் ஏற்கனவே Perplexity AI-ல் இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே ChatGPT தேடுபொறியும் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலமாக பயனர்கள் அவர்களுக்குத் தேவையான விஷயத்தை உடனடியாக துல்லியமாகதா தெரிந்து கொள்ளலாம். மேலும் அதன் உண்மையைத் தன்மையை அறிய, அவற்றில் கொடுக்கப்படும் லிங்குகளை கிளிக் செய்து சரி பார்த்துக் கொள்ளலாம். இன்றுவரை google சர்ச் இன்ஜின் கிட்டத்தட்ட 90 சதவீத மார்க்கெட்டை தன்வசமாக்கிக் கொண்டுள்ளது. அதைத்தொடர்ந்து மைக்ரோசாப்ட் பிங்க் இருந்து வரும் நிலையில், இப்போது வெளிவர உள்ள ChatGPT தேடுபொறி ஒரு கேம் சேன்ஜராகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.