Sam Altman joins Microsoft 
அறிவியல் / தொழில்நுட்பம்

மைக்ரோசாஃப்டில் இணையும் சாம் ஆல்ட்மேன்! என்ன செய்ய போகிறார்?

கிரி கணபதி

ChatGPT இன்றைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்கி உலகை அதிர வைத்த OpenAI நிறுவனம் கடந்த சனிக்கிழமை அதன் CEO சாம் ஆல்ட்மேனை நிறுவனத்தில் இருந்து வெளியேற்றியது. ஆனால் இவர் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்து பணிபுரிய உள்ளதாக அந்நிறுவன CEO சத்திய நாதெல்லா அறிவித்துள்ளார்.

OpenAI தலைமை குழு வெளியிட்ட அறிக்கையில், “இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சாமின் பங்களிப்புக்கு நன்றி. அதே நேரம் நம் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு புதிய தலைமை அவசியம் என்பதால் இந்த முடிவை நாங்கள் எடுக்கிறோம்.” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து OpenAI CEO சாம் ஆல்ட்மேன் மற்றும் அதன் முன்னாள் தலைவருமான கிரெக் ப்ரோக்மேன் ஆகியோரை தங்களின் AI ஆராய்ச்சி குழுவை வழிநடத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் பணியமர்த்தியுள்ளது.

இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் CEO சத்திய நாதெல்லா தனது எக்ஸ் பக்கத்தில், “ OpenAI நிறுவனத்துடனான எங்கள் உறவு உறுதியாக இருக்கிறது. மேலும் எங்களுடைய புதிய தயாரிப்புகளில் நம்பிக்கை வைத்துள்ளோம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் அனைத்தையும் புதுப்பிப்பதற்காக வாடிக்கையாளர்கள், எங்களுடைய திறன் மற்றும் கூட்டாளர்களை தொடர்ந்து ஆதரிக்கிறோம். மேலும் சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரேட் ப்ரோக்மேன் ஆகியோர் நமது நிறுவனத்தில் இணைந்து AI ஆராய்ச்சி குழுவை வழிநடத்த உள்ளார்கள் என்ற செய்தியை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களின் வெற்றிக்குத் தேவையான விஷயங்களை வழங்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என குறிப்பிட்டிருந்தார்.

OpenAI நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்ட அதன் CEO சில தினங்களிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்துள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. பிரதமர் மோடியின் காணொளி டீப்பேக் செய்யப்பட்டு வெளியானதனாலயே அவர் அந்நிறுவனத்திலிருந்து விலக்கப்பட்டார் என ஒரு சாரார் கூறினாலும், உண்மையிலேயே அவர் ஏன் நீக்கப்பட்டார் என்பது பற்றி யாருக்கும் தெரியவில்லை. 

இருப்பினும் அவர் தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இணைந்திருப்பது அந்நிறுவனத்திற்கு பலமாக மாறியுள்ளது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT