The Demon Core 
அறிவியல் / தொழில்நுட்பம்

The Demon Core: உலகத்தை அழிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு! 

கிரி கணபதி

இந்த உலகத்தையே அழிக்கக்கூடிய ஆற்றலை தனக்குள் வைத்திருக்கும் ஒரு சிறிய சக்தி வாய்ந்த உருண்டை வடிவ பொருளை கற்பனை செய்து பாருங்கள். The Demon Core என அழைக்கப்படும் இந்தக் கோள வடிவ பொருள், ப்ளூட்டோனியம் எனப்படும் மிகவும் ஆபத்தான கதிரியக்கப் பொருளால் ஆனது. இரண்டாம் உலகப் போரின்போது அணுகுண்டு தாக்குதலுக்கு எதிரான ஒரு “முன்பாதுகாப்பு நடவடிக்கையாக” அமெரிக்காவில் இது வடிவமைக்கப்பட்டது. 

டிமோன் கோர்-ன் வரலாறு: 

1940 களின் முற்பகுதியில் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகியவை அணு ஆயுதங்களை உருவாக்குவதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டன. அணு ஆயுதத்தின் வளர்ச்சியை முடக்க, அமெரிக்க அரசாங்கம், ‘மேன்ஹேடன் திட்டம்’ என்ற ரகசிய திட்டத்தைத் தொடங்கியது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, லாஸ் அலாமோஸ் தேசிய ஆய்வகத்தில் அணுகுண்டுகளை உருவாக்க, ஒரு குழு விஞ்ஞானிகள் பணியாற்றினர். 

இவர்கள் 1944 இல் ஒரு புதிய வகை அணுகுண்டை உருவாக்கினர். இது ப்ளூட்டோனியத்தை அடிப்படையாகக் கொண்டது. யுரேனியத்தை விட ப்ளூட்டோனியம் அதிக வெடிக்கும் சக்தியைக் கொண்டிருப்பதால், சிறிய அளவிலான ப்ளூட்டோனியத்தைப் பயன்படுத்தி சக்தி வாய்ந்த அணுகுண்டை உருவாக்க முடியும். இந்த அணுகுண்டுக்கு ‘Demon Core’ என பெயர் வைத்தனர். இது 8.9 சென்டிமீட்டர் விட்டம் மற்றும் 6.2 கிலோ எடை உடையதாகும். 

இதை முறையாக சோதிப்பதற்கு முன்பே Demon Core-ஐ உருவாக்கிய விஞ்ஞானிகள் இருவர், பெரும் விபத்தை எதிர்கொண்டனர். அமெரிக்காவில் உள்ள லாஸ் அலாமோஸ் தேசிய ஆய்வகத்தில், ஆகஸ்ட் 21, 1945 அன்று, ஹாரி டாக்லியன் என்ற இயற்பியலாளர் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, நியூட்ரான் பிரதிபலிப்பு பொருள் அடங்கிய சிறிய துண்டு அவரது கையில் இருந்து நழுவி, Demon Core-ன் மீது விழுந்தது.

இதனால், திடீரென அதன் கட்டுப்படுத்த முடியாத செயின் ரியாக்ஷன் தூண்டப்பட்டு, கதிர்வீச்சை வெளிப்படுத்தியது. உடனடியாக அந்த விஞ்ஞானி தூண்டுதலை ஏற்படுத்திய பொருளை அகற்றினாலும், நொடிப்பொழுதில் அறை முழுவதும் கதிர்வீச்சு பரவி, விஞ்ஞானி கொடூரமாக பாதிக்கப்பட்டார். பின்னர், சில வாரங்களுக்குப் பிறகு அவர் இறந்து போனார். இதுதான் டிமோன் கோரின் முதல் பலி. 

சில மாதங்களுக்குப் பிறகு டிமோன் கோர் மீண்டும் தன் கோர முகத்தைக் காட்டியது.‌ ‘லூயிஸ் ஸ்லோட்டின்’ என்ற மற்றொரு இயற்பியலாளர் மே 21, 1946 இல் இதை பரிசோதித்தார். அப்போது தவறுதலாக ஒரு ஸ்க்ரூ டிரைவர் இதன் மீது விழவே, மீண்டும் கதிர்வீச்சை அது வெளியிடத் தொடங்கியது. கண நேரத்தில் அந்த ஸ்க்ரூ டிரைவரை அவர் எடுத்திருந்தாலும், ஆபத்தான கதிர்வீச்சு அவரை மோசமாகத் தாக்கியது. இவரும் சில வாரங்களுக்குப் பிறகு மரணத்தை சந்தித்தார். 

இந்த இரண்டு விபத்துகளும் ப்ளூட்டோனியம் அணுகுண்டால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் அணுசக்தி பொருட்களை கையாளும்போது எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தின. இதன் பிறகு, டிமோன் கோர் சம்பந்தப்பட்ட கதிரியக்க பொருட்களை கையாள்வதற்கான பாதுகாப்பு நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் கொண்டுவரப்பட்டன. 

இந்த விபத்துகளுக்குப் பிறகு 1962 இல் லாஸ் அலாமோஸ் தேசிய ஆய்வகத்திலிருந்து சுமார் 400 மைல்கள் தொலைவில் உள்ள, நவாடா பாலைவனத்தில் உள்ள நிலத்தடி சுரங்கத்திற்கு Demon Core மாற்றப்பட்டது. அன்று முதல் இன்று வரை அது அங்கேயேதான் இருக்கிறது. இதிலிருந்து கதிர்வீச்சு வெளியேறாதவாறு பாதுகாத்து, பொதுமக்கள் அணுக முடியாத வகையில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒருவேளை தவறுதலாக இதன் செயின் ரியாக்ஷன் தூண்டப்பட்டால், உலகையே அழிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பதை குறிப்பிடத்தக்க. 

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT