Trick to prevent spam calls!
Trick to prevent spam calls! 
அறிவியல் / தொழில்நுட்பம்

ஸ்பேம் கால்களைத் தடுக்கும் ஈஸி ட்ரிக் இதுதான்!

கிரி கணபதி

இன்றைய காலகட்டத்தில் மக்களிடம் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதிலும் குறிப்பாக இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது என்னவென்றால் ஸ்பாம் அழைப்புகள் தான். இதில் பெரும்பாலும் டெலி மார்க்கெட்டிங் தொடர்பான அழைப்புகளே அதிகம் வரும். மேலும், சில மோசடிக்காரர்களும் ஸ்பேம் அழைப்புகளை செய்து பணத்தைப் பறிக்க முயல்வார்கள். 

நாம் முக்கியமான வேலையில் இருக்கும் போது இதுபோன்ற அழைப்புகள் நமக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இந்த பதிவில் இத்தகைய அழைப்புகளை எப்படி எளிதாக பிளாக் செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். 

பொதுவாகவே இப்போது வரும் பெரும்பாலான ஸ்மார்ட் ஃபோன்களில் இத்தகைய மோசடி அழைப்புகளை கண்டறிந்து தானாகவே பிளாக் செய்யும் அம்சம் கொடுக்கப்படுகிறது. அதற்காக உங்கள் சாதனத்தின் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று ஸ்பாம் அழைப்புகளை பிளாக் செய்யும் அம்சத்தை எனேபிள் செய்தால், மோசடி எண்களில் இருந்து உங்களுக்கு வரும் அழைப்புகளை உடனடியாகத் தடுக்கலாம். 

அல்லது உங்களுக்கு ஸ்பேம் அழைப்புகளே சுத்தமாக வரக்கூடாது என்றால், ஒரே ஒரு மெசேஜ் அனுப்பி அனைத்தையும் பிளாக் செய்யும் வசதியும் உள்ளது. அதாவது 1909 என்ற எண்ணிற்கு FULLY BLOCK என ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், அடுத்த நொடியே உங்கள் சாதனத்தில் ஸ்பேம் அழைப்புகள் முடக்கப்பட்டதற்கான கன்ஃபர்மேஷன் மெசேஜ் உடனடியாக வரும்.

இந்த மெசேஜ் உங்களுக்கு வந்த 24 மணி நேரத்தில், எல்லாவிதமான ஸ்பாம் மெசேஜ்களும், அழைப்புகளும் தடை செய்யப்படும். இப்படி செய்யும் பட்சத்தில் ஸ்பேம் அழைப்புகளின் தொந்தரவிலிருந்து விடுபடலாம். கட்டாயம் இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த அம்சம் மோசடிக்காரர்களிடம் நீங்கள் சிக்கிக்கொள்ளாமல் உங்களை பாதுகாக்கும். 

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT