UPI Transaction without internet 
அறிவியல் / தொழில்நுட்பம்

UPI Transaction: இனி இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாமே! 

கிரி கணபதி

இனி இன்டர்நெட் இல்லாமலேயே ஸ்மார்ட்போனில் எளிதாக பணப் பரிமாற்றம் செய்யும் சேவையை NPCI அறிமுகம் செய்துள்ளது. 

வேகமாக முன்னேறி வரும் உலகில், மிகப்பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்த விஷயங்களில், இணையம் வழியாக பணப்பரிவர்த்தனை செய்வது, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு காலத்தில் கையில் பணத்தை வைத்துக்கொண்டு செலவு செய்து கொண்டிருந்த நாம், இப்போது நேரடி பண பரிவர்த்தனையை பெரும்பாலும் தவிர்த்துவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு உலகில் டிஜிட்டல் பணப்பரிவர்தனை அதிகரித்துவிட்டது. 

இப்போதெல்லாம் எந்த கடைக்கு சென்றாலும் GPay இருக்கிறதா phonePE இருக்கிறதா என்று பலர் கேட்பதை நாம் காண முடிகிறது. அந்த அளவுக்கு பலரும் டிஜிட்டல் பேமென்ட் முறைக்கு மாறி வருகின்றனர். இந்த முறை அனைவருக்கும் எளிதாக இருந்தாலும், சில நேரங்களில் சிக்கல்களிலும் நம்மை மாட்டச் செய்கிறது. ஏனெனில் இத்தகைய தளங்கள் இன்டர்நெட் இருந்தால் மட்டுமே இயங்கும் என்பதால், இன்டர்நெட் இல்லாத இடங்களில் இவற்றைப் பயன்படுத்துவது சாத்தியமில்லாதது. 

இந்த பிரச்சனையை தீர்க்கும் விதமாகத்தான், நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்திய யூபிஐ சேவையை, இனி இன்டர்நெட் இல்லாமலே பயன்படுத்தும் அம்சத்தை கொண்டு வந்துள்ளது. *99# என்ற USSD Code பயன்படுத்தி ஆஃப்லைன் வழியாகவும் இனி UPI பரிவர்த்தனை செய்ய முடியும். மேலும் இந்தக் Code-ஐ பயன்படுத்தி, அக்கவுண்ட் விவரங்களை சரி பார்ப்பது, UPI பின்னை மாற்றுவது போன்ற வங்கி சார்ந்த செயல்களையும் செய்து கொள்ளலாம். 

மேலும் பணம் அனுப்புதல், பெறுதல், பேலன்ஸ் விவரங்களை சரிபார்ப்பது, சுய விவரங்களை பார்ப்பது போன்ற மற்ற சேவைகளையும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த புதிய அம்சம் இன்டர்நெட் இல்லாத இடங்களில் பலருக்கு உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது. 

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT