What if there really were aliens on Earth? 
அறிவியல் / தொழில்நுட்பம்

பூமியில் நிஜமாகவே ஏலியன்கள் இருந்தால் எப்படி இருக்கும்? 

கிரி கணபதி

இந்த பிரபஞ்சம் நமக்குத் தெரியாத பல மர்மங்கள் நிறைந்தது. பூமியைத் தவிர வேறு எங்காவது உயிரினங்கள் இருக்கிறதா என்ற கேள்வி மனித குலத்தை பல நூற்றாண்டுகளாக சிந்திக்க வைத்துள்ளது. அதுவும் விண்வெளி ஆராய்ச்சியில் மனிதர்களின் வளர்ச்சியால் இந்தக் கேள்விக்கான விடையை தேடும் முயற்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை இந்த பூமியில் ஏலியன்கள் இருந்தால் எப்படி இருக்கும்? அவற்றின் தோற்றம், தொழில்நுட்பம் மற்றும் தொடர்புகொள்ளும் முறை போன்ற எல்லா விஷயங்களையும் இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம். 

பூமியில் ஏலியன்கள் இருந்தால் அவை எப்படி இருக்கும் என்பதை கணிப்பது மிகவும் கடின. ஏனெனில் பூமிக்கு வெளியே வாழும் உயிரினங்கள் நாம் கற்பனை செய்ய முடியாத வடிவங்களில் இருக்கலாம். அல்லது பூமியில் உள்ள உயிரினங்களைப் போலவே அவை உருமாறி நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட வடிவங்களில் இருக்கலாம். சிலர் பூமியில் உள்ள ஏலியன்கள் நம்மைப் போன்றே இருக்கும் என நம்புகின்றனர். அதாவது, இரண்டு கைகள் இரண்டு கால்கள் மற்றும் தலை போன்ற உடலமைப்புடன் சற்று வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் என நம்புகின்றனர். 

ஏலியன்கள் என்றாலே நம்மை விட மேம்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் என பல திரைப்படங்களில் காட்டப்பட்டுள்ளது. அது கற்பனை செய்ய சுவாரசியமாக இருந்தாலும், அவற்றின் தொழில்நுட்பம் பூமியில் உள்ள தொழில்நுட்பங்களை விட வித்தியாசமாகவே இருக்கும். ஏனெனில் வேற்று கிரகங்களின் சூழ்நிலைகள், தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்ப அவை வடிவமைக்கப்பட்டு இருக்கலாம். ஒருவேளை அத்தகைய தொழில்நுட்பம் நமது பூமியில் கிடைத்தால், அதைப்பற்றி நன்கு புரிந்துகொண்டு புதிய தொழில்நுட்பத்தை மனிதர்கள் மேம்படுத்தும் வாய்ப்புள்ளது. 

மனிதர்களுடனான தொடர்பு: ஏலியன்களுடன் நாம் தொடர்பு கொண்டால் அது மனிதகுலத்திற்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும். இதன் மூலமாக நமது பூமியைத் தாண்டி பல விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள முடியும். ஒருவேளை ஏலியன்கள் நம்முடன் நட்பு பாராட்டினால், அவற்றிடமிருந்து பல விஷயங்களை நாம் கற்றுக் கொள்ளலாம். குறிப்பாக அவற்றின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரம் மனித குலத்திற்கு முன்னேற்றம் தரும் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

ஒருவேளை ஏலியன்கள் மனிதர்களை விரோதிகளாக நினைத்தால், அது மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். அவற்றின் தொழில்நுட்பம் நிச்சயம் நம்மை விட மேம்பட்டதாக இருக்கும் என்பதால், அவற்றை எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினம். எனவே ஏலியன்களை நாம் கண்டுபிடித்தாலும், அல்லது நம்மை ஏலியன்கள் கண்டுபிடித்தாலும் அதனால் பெரும் ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. 

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT