What is NFT? 
அறிவியல் / தொழில்நுட்பம்

NFT என்றால் என்ன? டிஜிட்டல் பாதையில் உலகம்! 

கிரி கணபதி

சமீபகாலங்களாகவே கிரிப்டோகரன்சி மற்றும் NFT போன்ற வார்த்தைகள் பெரும்பாலான இடங்களில் பேசப்படுகிறது. இதில் கிரிப்டோகரன்சி பற்றி நிறைய பேர் எழுதி உள்ளார்கள். ஆனால் NFT என்பது பற்றி மக்களிடையே சரியான புரிதல் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

இதன் விரிவாக்கம் ஆங்கிலத்தில் Non-Fungible Token என்பதாகும். இதனுடைய பெயரில் இருந்தே இதன் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். Fungible Token என்றால் ஒரே மாதிரி இருக்கும் பல விஷயங்களுக்கு, ஒரே மதிப்பு இருப்பது என்று பொருள். உதாரணத்திற்கு நீங்கள் உங்களுடைய கையில் பத்து நூறு ரூபாய்த் தாள் வைத்துள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம். அந்த ஒவ்வொரு நூறு ரூபாய்த் தாளின் தனிப்பட்ட மதிப்பும் 100 ரூபாய் தான். அந்தப் பத்து 100 ரூபாய் தாளை பிறருக்கு கொடுத்தால், அதனுடைய மதிப்பும் 100 ரூபாய்தான். அதில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. அதனால் ஒரே மதிப்புடைய பொருள் பலரிடமிருக்க வாய்ப்புள்ளது. யாரும் அதற்கு தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியாது.

இதற்கு அப்படியே எதிர்மாறானது தான் Non-Fungible Token. அதாவது ஒரு புகைப்படத்தை நான் NFT ஆக மாற்றினால், அதற்கென்று ஒரு தனிப்பட்ட உரிமம் கிடைத்துவிடும். உலகிலேயே அந்த ஒரு புகைப்படம் மட்டும்தான் இருக்கிறது என்பதுபோல, ஓர் குறிப்பிட்ட மதிப்பைக் கொண்டு செயல்படும். அதன் உரிமையாளரைத் தவிர வேறு யாரும் அதை சொந்தம் கொண்டாட முடியாது.

NFT-ன் முக்கியத்துவங்கள் என்னென்ன? [Importance of NFT]

  1. இது முழுக்க முழுக்க டிஜிட்டல் முறை என்பதால், இதன் பரிவர்த்தனைகள் எளிமையாக இருக்கும்.

  2. தரகர்கள், டீலர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் மூலம் ஏமாற்றப்படுவதை முற்றிலுமாக நாம் தவிர்க்கலாம்.

  3. நேரடியாக விற்பவரிடமோ அல்லது வாங்குவரிடமோ தொடர்பு கொள்ளலாம்.

  4. இது முற்றிலும் புதுவிதமான சந்தைமுறையை உலகிற்கு அமைத்துத்தர வாய்ப்புள்ளது.

  5. எதிர்காலத்தில் நீங்கள் வைத்திருக்கும் வீடு, பொருள், நிலம் போன்ற அனைத்தையும் முதலில் NFT- ஆக மாற்றி, பின்னர் இணையத்திலேயே நேரடியாக உங்கள் விருப்பம் போல் விற்பனை செய்யும் வாய்ப்புள்ளது.

NFT-ல் உள்ள பிரச்சனைகள். [Problems in NFT]

இதனால் ஏற்படும் பிரச்சினைகள் என்று பார்த்தால், ஒரு புகைப்படத்தை NFT ஆக மாற்ற கணினியின் உதவி அவசியம். கணினி ஓடுவதற்கு மின்சாரம் அவசியம். பெரும்பாலும் மின்சாரம் உருவாக்க எதையாவது எரிக்க வேண்டும். அதனால் உலக வெப்பமயமாதல் போன்ற ஆபத்துக்கள் இதில் உள்ளது. மேலும் அதிக திறன் துண்ட கணினி மற்றும் கிராபிக்ஸ் கார்டு தேவைப்படும் என்பதால், செலவுகளும் அதிகமாகும். 

என்னுடைய NFT Hack செய்யப்பட்டால் என்ன செய்வது? [What should I do if My NFT was Hacked]

பெரும்பாலும் இது ஹேக் செய்யப்பட வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. உங்களுக்கு ஆசை வார்த்தை கூறி யாரேனும் ஏமாற்றலாமே தவிர, ஹேக் செய்யும் சாத்தியக்கூறுகள் இல்லை என்றே கூறலாம். ஏனென்றால் இதுவும் கிரிப்டோகரன்சிகள் இயங்க பயன்படும் BLOCKCHAIN தொழில்நுட்பம் மூலம் இயங்குவதாகும். இதை ஹேக் செய்வது மிக மகக் கடினம் என்று பல வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

இது என்னதான் பிரபலமாக இருந்தாலும் இவற்றை வாங்கி விற்பனை விற்பனை செய்வதில் சில சிக்கல்கள் உள்ளது. NFT என்பது BLOCKCHAIN தொழில்நுட்பத்தில் இயங்குவதால், அந்த குறிப்பிட்ட BLOCKCHAIN-ன் கிரிப்டோகரென்ஸி சிறிதேனும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். அதற்கு முதலில் நீங்கள் கிரிப்டோகரன்சி வாங்க வேண்டும். அதன் பின்னர் அந்தக் கிரிப்டோகரன்சி வைத்திருக்கும் Wallet-கு நீங்கள் வாங்கும் NFTஐ எளிதாக மாற்றிக் கொள்ளலாம். பயனர்களின் பாதுகாப்பதற்காகவே இந்த முறை பின்பற்றப்படுகிறது.

இது சற்று கடினமாகக் தெரிந்தாலும், பாதுகாப்பிற்காக இதை நாம் செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது, இதிலெல்லாம் நான் முதலீடு செய்ய மாட்டேன் என நினைத்தால், ரிஸ்க் எடுப்பவர்கள் தான் வாழ்வில் முன்னேறுகிறார்கள் என்பதை ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT