அறிவும், கல்வியும் ஐம்புலன்களோடு தொடர்பு உடை யவை. தாயின் கருவறையில் இருக்கும் போது குழந்தைக்கு புலன்கள் தெரிவதில்லை. கருவறையை விட்டு வெளியே வந்த பிறகுதான் ஒவ்வொரு புலனாக அறிய தொடங்கும்.
முதல் முதலில் குழந்தை தனது சருமத்தின் மூலம் புதிய சூழலை உணர்ந்து அதன், தொடு உணர்வு செயல்பட தொடங்கும். அதன் பிறகு சுற்றி உள்ளவர்கள் எழுப்பும் ஒலியை தனது காதுகளை கொண்டு கேட்கும். மூன்றா வதாக மூச்சு விட முயற்சித்து அழுவதும் அழுத பின் பசிக்கு நாவினால் தாய் பால் சுவைப்பதும் நிகழும். கண் திறந்து பார்க்க 3 நாள் ஆகும் இறுதியில் கற்பனை திறனும், சிந்தனை ஆற்றலும், செயல் பட நாளாகும்.
இவற்றில் இருந்து தெரிவது மெய் _ செவி _ மூக்கு _ நாக்கு _ கண் என்ற வரிசை தான் ஐம்புலன்களின் சரியான வரிசை ஆகும்.
அதேபோல் ஒருவர் முதிர்ச்சி அடையும் போதும் முதலில் கண் பார்வை குன்றும்.அடுத்து பேச்சு குளறும். அதனால் மூச்சு விடுவது தடைபடும். பின் செவியின் கேட்கும் திறன் குறைந்து பின் சருமத்திற்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் போகவே உடல் குளிர்ந்து போகும்.
புலன்களின் வேலை:
தான் உணர்ந்ததை மூளைக்கு கடத்தி அந்த தகவலை மொத்த உடலிற்கும் கொண்டு செல்வதே புலன்களின் முதன்மையான பணி ஆகும். எந்த புலனிற்கு மூளை அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்றால் வெப்ப நிலை மாற்றத்தை உணரும் சருமத்திற்கு தான்.
உடலால் கட்டுபடுத்த இயலாத புலன்களாக நம் சருமமும், காதுகளும் உள்ளன. மூக்கு உடலால் கட்டுபடுத்த முடிந்த புலன் தான் என்றாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கட்டுபடுத்த இயலாது. நாக்கும், கண்களும் உடலுக்கு முழு கட்டுப் பாட்டில் உள்ள புலன்களாகும்
அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் புலங்களில் மிகவும் முக்கியமானவை காதுகளும், கண்களும் தான். காதுகளின் வழியாக கடத்தப்படும் தகவல்கள் உயிர்புடன் மனதில் பதியும்.
படிக்கும் போது கண்களால் பார்த்து படிப்பதை விடவும் ஆசிரியரின் விளக்கத்தை காதுகளால் உள் வாங்கி கேட்பதால் தான் பாடம் விளங்குகிறது. சத்தம் போட்டு படிக்கும் போது நாம் படிப்பது நம் காதிலே மீண்டும் மீண்டும் ஒலிப்பதால் மிக எளிதாக நம் மனதில் பதியும். காதால் கேட்பதால் மனதில் எளிதாக பதிய வைக்க இயலும் என்ற அறிவியல் காரணமே சத்தம் போட்டு படிக்க சொல்வதற்கான அடிப்படை காரணம்.
கண்களை அதிகம் பயன் படுத்துவது உடல் நலனிற்கு கேடாக மாறும். ஏனெனில் கண்கள் உடல் உள்ளுறுப்பான கணையம், மற்றும் கல்லீரலு டன் தொடர்புடைய உறுப்பாகும். இந்த கணையம் மற்றும் கல்லீரலில் சிக்கல் ஏற்படும் பொழுதுதான் மஞ்சள் காமாலை நோய் வருகிறது. இது கண்களையும் பாதிக்கிறது.
கணையம் மற்றும் கல்லீரலின் வேலை உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதாகும். கண்களுக்கு அதிகம் வேலை கொடுத்தால் கல்லீரலும்,கணையமும் பாதிக்கப்படும். அதனால் தான் இரவில் கண்களை மூடி உறங்க வேண்டியது அவசியமாகிறது.
மேலும் செவியை மட்டும் பயன்படுத்தி அறிவை வளர்க்க முயற்சித்தால் செவியில் விழும் எதையும் கவனிக்க விடாமல் கண்களின் அலைபாயும் தன்மை தடுத்து விடும்.
என்னதான் கேள்வி ஞானம் மூலம் பலவற்றை மனதில் பதிவு செய்து வைத்திருந்தாலும் செயல்முறை என வரும் போது கண்களின் பங்கு மிக மிக அவசியம் ஆகிறது.