what would happen if gravity worked in reverse on Earth? 
அறிவியல் / தொழில்நுட்பம்

பூமியில் புவியீர்ப்பு தலைகீழாக வேலை செய்தால் என்ன நடக்கும் தெரியுமா? 

கிரி கணபதி

புவியீர்ப்பு என்பது நம்மை பூமியின் மையத்தை நோக்கி ஈர்க்கும் ஒரு அடிப்படை இயற்பியல் விசை. இது நம் கிரகத்தில் உள்ள மனிதர்கள், மரங்கள், மலைகள், பெருங்கடல்கள், காற்று, மேகங்கள் மற்றும் வளிமண்டலம் போன்றவை அவற்றின் இடத்தில் நிலைத்திருப்பதற்கு முக்கிய காரணமாகும். ஒருவேளை பூமியில் புவியீர்ப்பு விசை தலைகீழாக வேலை செய்தால் என்ன ஆகும் என கற்பனை செய்து பாருங்கள்? 

நமது கற்பனையில் முதலில் தோன்றுவது பூமியை நோக்கி ஈர்க்கப்படும் அனைத்தும் பூமியை விட்டு விலக ஆரம்பிக்கும்.  வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் வானத்தை நோக்கிச் சென்று மாயமாகிவிடும் என்பதால், பூமி காற்றில்லாத வெற்றிடமாக மாறும். இதனால் பூமியில் ஆக்ஸிஜனை நம்பி வாழும் அனைத்து ஜீவராசிகளும் மடிந்துபோகும்.  

பூமியில் உள்ள கடல்கள் அப்படியே மேல் நோக்கி உயர்ந்து, பெரிய வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்தும். புவியீர்ப்பு விசை தலைகீழாக இருப்பதால் மனிதர்களால் பூமியில் நகர முடியாது. விலங்குகள் மனிதர்கள் என அனைத்து அசையும் பொருட்களும் காற்றில் மிதக்க ஆரம்பிக்கும். கட்டிடங்கள் மலைகள் என அனைத்துமே, தரையோடு பெயர்ந்து அப்படியே மேல் நோக்கி இழுக்கப்படும். 

சூரியனைச் சுற்றிவரும் பூமியின் சுழற்சியானது புவியீர்ப்பு விசையால் பராமரிக்கப்படுகிறது. ஒருவேளை இந்த புவியீர்ப்பு விசை தலைகீழாக மாறினால் பூமி அதன் சுழற்சியை இழந்து, தான் இஷ்டத்திற்கு சீரற்ற முறையில் சுழல ஆரம்பிக்கும். இத்தகைய மோசமான விளைவுகளால் பூமியில் உள்ள உயிர்கள் அனைத்தும் மடிந்து போகலாம். பூமி யாருமே உயிர் வாழ முடியாத இடமாக மாறிவிடும். கிரகத்தில் உள்ள அனைத்தும் பேரழிவுக்குட்பட்டு, விண்வெளியில் தூக்கி வீசப்படும் அல்லது புவியீர்ப்பு விசை மேல்நோக்கி எங்கு சென்று முடிகிறதோ அந்த இடத்திற்கு பயணிக்கும். 

புவியீர்ப்பு விசை என்பது நமது பூமியின் அடிப்படை ஆற்றல்களில் ஒன்றாகும். பூமி நிலையாக இருப்பதற்கு இதுதான் முக்கிய காரணம். புவியீர்ப்பு விசை இல்லாமல் பூமி ஒரு அழிவுற்ற கிரகமாகவே மாறிவிடும். 

இந்த கற்பனையானது நமக்கு புவியீர்ப்பு விசை எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்துகிறது. இந்த சிறிய மாற்றம் பூமியில் எந்த சுவடுகளும் இல்லாத பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைக்கும்போதே பயங்கரமாக உள்ளது. 

இவ்வாறு புவியீர்ப்பு விசை தலைகீழாக மாறுவதற்கு சாத்தியம் இல்லை என்றாலும், இந்த கற்பனை நமது வாழ்வின் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துரைக்கிறது. எனவே, இருக்கும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து, சுற்றுச்சூழலுக்கு எந்த பாதகத்தையும் விளைவிக்காமல், இயற்கையுடன் ஒன்றி வாழ நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். 

Scientists Best Quotes: அறிவியலாளர்களின் தலைசிறந்த15 மேற்கோள்கள்! 

ஒரே நாளில் மூன்று விதமான கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்!

ஃபேஸ்பேக்கை நீண்ட நேரம் முகத்தில் வைத்திருப்பீர்களா? போச்சு!

உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் 4 வகையான விஷப்பாம்புகள்!

60 வயதுக்குப் பின்னர் நிம்மதியாக வாழ வேண்டுமா? இதை முதல்ல படிங்க!

SCROLL FOR NEXT