You can bring back the deleted app.
You can bring back the deleted app. 
அறிவியல் / தொழில்நுட்பம்

இப்படி செய்தால் டெலிட் ஆன செயலியை மீண்டும் கொண்டு வரலாம்!

கிரி கணபதி

"அடக்கடவுளே! தெரியாம இந்த செயலியை டெலிட் பண்ணிட்டேனே" என கவலைப்படும் நபரா நீங்க? இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். நீங்கள் டெலிட் செய்த செயலியை எளிதாக மீட்டெடுக்க முடியும். 

ஸ்மார்ட்போன்களை சிறப்புமிக்க சாதனங்களாக பார்க்க வைப்பது அவற்றில் இருக்கும் அட்டகாசமான ஆப்கள் தான். இவை நமக்கு தேவையான பணிகள் அனைத்தையுமே சிறப்பாக செய்து கொடுத்துவிடும். இதனால் யார் புதிய போன் வாங்கினாலும் முதலில் அவர்கள் விரும்பிய செயலிகளை அதில் இன்ஸ்டால் செய்து விடுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தாங்கள் பல நாட்கள் விரும்பிப் பயன்படுத்திய ஆப்புகள் தவறுதலாக டெலிட் செய்யப்பட்டுவிட்டால் அதில் கவலை கொள்வோரும் ஏராளம். 

நீங்கள் நினைக்கலாம் டெலிட் ஆனாலும் மீண்டும் play store சென்று இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் தானே என. ஆனால் டெலிட் ஆன செயலியில் உள்ள தரவுகள் அனைத்துமே காணாமல் போய்விடும். இதற்கு முன்பு நீங்கள் என்னவெல்லாம் பயன்படுத்தினீர்கள் என்பதற்கான தடம் சுத்தமாக இருக்காது. குறிப்பாக சாட்டிங் செயகள் டெலிட் செய்யப்பட்டால், அதில் உள்ள சேட் ஹிஸ்டரியில் பெரும்பாலானவை நீங்கிவிடும். 

ஆனால் இனி நீங்கள் தெரியாமல் டெலிட் செய்த ஆப்பை மீட்டெடுக்க முடியும். ஒரு செயலியை நீங்கள் உங்கள் சாதனத்திலிருந்து நீக்குவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலர் கோபத்தில் நீக்குவார்கள், சிலர் தெரியாமல் நீக்கிவிடுவார்கள் இப்படி பல காரணங்களுக்காக அந்த செயலி நீக்கப்படலாம். அப்படி டெலிட் ஆன செயலியை நீங்கள் மீட்டெடுக்க,

  • முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோர் பக்கத்திற்கு செல்லுங்கள்.

  • இப்போது மேலே வலது புறத்தில் தெரியும் உங்கள் ப்ரொபைல் ஐகானை கிளிக் செய்யுங்கள்.

  • அதில் உள்ள Apps மற்றும் Manage Apps விருப்பத்தை தேர்வு செய்தால், நீங்கள் உங்கள் சாதனத்தில் இன்ஸ்டால் மற்றும் அன் இன்ஸ்டால் செய்த செயலிகள் தெரியும். 

  • அதில் Installed என்பதற்கு மாறி பார்த்தால், இதற்கு முன்னர் உங்கள் சாதனத்திலிருந்து இன்ஸ்டால் செய்து நீக்கப்பட்ட பட்டியல் திரையில் தெரியும். அங்கே உங்களுக்குத் தேவையான செயலிகளை எளிதாக மீட்டெடுக்க முடியும். 

இப்படி உங்கள் சாதனத்திலிருந்து நீக்கப்பட்ட செயலிகளை ஆண்ட்ராய்டு சாதனங்களில் எளிதாகக் காணலாம். ஆனால் இத்தகைய சிறப்பான அம்சம் iOS சாதனங்களில் இல்லை என்பது வருத்தமே. ஆனால் ஆப்பிள் போன்களில் ரெக்கவரி அம்சம் மூலமாக அவற்றை மீட்டெடுக்க முடியும். 

மாற்றுப்பாலினத்தவர்களை மனநோயாளிகள் என்று அறிவித்த நாடு… வெடித்தது சர்ச்சை!

தாய்மையை எதிர்நோக்கும் பெண்களைத் தாக்கும் தைராய்டு பிரச்னையை தடுப்பது எப்படி?

நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது!

நேற்றைய சராசரிகள் இன்றைய சக்கரவர்த்திகள்!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க ஆய்வுகள் கூறும் தகவல்கள்!

SCROLL FOR NEXT