ஸ்பெஷல்

25 வருட இசைப்பயணம்: யுவன் சங்கர் ராஜா கொண்டாட்டம்!

கல்கி

தனக்கு இந்தி தெரியாததன் காரணமாகவே 'இந்தி தெரியாது போடா' என்ற டிசர்ட் அணிந்ததாக இசையமைப்பாளர் யுவன் சங்கர ராஜா தெரிவித்துள்ளார்.

யுவன் சங்கர்ராஜா திரைத்துறையில் இசையமைப்பாளராக 26 ஆண்டுகள் பணியாற்றியதைக் கொண்டாடும் வகையில், சென்னை நுங்கம்பாக்கம் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது;

எனது 16வது வயதில் இசையமைப்பாளராக அறிமுகி, இப்போது திரைத்துறை இசைப் பயணத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள்ளேன். இதுவரை விருதுகளை நோக்கமாகக் கொண்டு நான் இசையமைக்கவில்லை. அதனாலேயே எனக்கு முக்கிய விருதுகள் கிடைக்கவில்லை என்று வருந்தியதில்லை. நான் 'இந்தி தெரியாது போடா' என்ற டிசர்ட் அணிந்தது பற்றி பலரும் கேட்டனர். எனக்கு உண்மையிலேயே இந்தி தெரியாது என்பதால்தான் அப்படி அணிந்தேன். ஆனால் இந்தி திரையுலகில் லதா மங்கேஷ்கருடன் பணியாற்ற வேண்டும் என விரும்பினேன், அது முடியாமல் போனது வருத்தமளிக்கிறது.

நடிகர் விஜய்யின்  மகன் ''யுவனிசம்'' என டி-சர்ட் அணிந்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மேலும் விஜய் என்னை நேரில் சந்தித்தபோது, ''என் மகன் உங்கள் மீது வெறியன்'' என கூறினார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது

இசையமைப்பாளர்கள் வாழ்வின் ஓரிடத்தில் ஆன்மீகத்திற்கு திரும்புவது இயல்பான விஷயம்.. அந்த வகையில் நானும் என் அம்மாவின் இறப்புக்குப் பின்னர் ஆன்மிக்கத்தில் நாட்டம் கொன்டேன்.  விரைவில் நானும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறேன்.

-இவ்வாறு யுவன் சங்கர்ராஜா  தெரிவித்தார்.

முருகப்பெருமானின் அர்த்தமுள்ள திருநாமக் காரணங்கள்!

லெமன் கிராஸின் 11 ஆரோக்கிய நன்மைகள்!

கேன்சரை தடுக்கும் 7 வகை வெஜிடேரியன் உணவுகள் தெரியுமா?

வெப்பம் வாட்டி வதைக்குதா? இந்த தேங்காய்ப்பால் ஐஸ்கிரீம் ட்ரை பண்ணி பாருங்களேன்! 

வேதங்கள் வழிபட்ட சிவபெருமான் எங்கு வீற்றிருக்கிறார் தெரியுமா?

SCROLL FOR NEXT