ஸ்பெஷல்

மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு; தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தொடக்கம்!

கல்கி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், மற்றும் வனத்துறை அதிகரிகளுக்கான 3 நாள்  மாநாடு இன்று துவங்கியது.

-இதுகுறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது;

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று முதல் 12-ம் தேதி வரையிலான மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துவங்கியது. அந்தந்த மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், அரசின் திட்டங்களின் செயல்பாடுகள், பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. இன்றைய மாநாட்டில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தப்படும். அதன் பின், மாவட்ட ஆட்சியர்களுடன் ஒரு நாள், காவல் கண்காணிப்பு அதிகாரிகளுடன் ஒரு நாள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய பிரச்சனைகள், சட்டம் ஒழுங்கு குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பு அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிவார்.

அதேப்போல், மாநாட்டின் முடிவில், சில திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவதோடு, சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் கவுரவிக்கப்படுவர்,

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

முருகப்பெருமானின் அர்த்தமுள்ள திருநாமக் காரணங்கள்!

லெமன் கிராஸின் 11 ஆரோக்கிய நன்மைகள்!

கேன்சரை தடுக்கும் 7 வகை வெஜிடேரியன் உணவுகள் தெரியுமா?

வெப்பம் வாட்டி வதைக்குதா? இந்த தேங்காய்ப்பால் ஐஸ்கிரீம் ட்ரை பண்ணி பாருங்களேன்! 

வேதங்கள் வழிபட்ட சிவபெருமான் எங்கு வீற்றிருக்கிறார் தெரியுமா?

SCROLL FOR NEXT