ஸ்பெஷல்

மோடி ஆட்சியில் 5 லட்சம் கோடி வங்கி மோசடி; ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

கல்கி

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிகாலத்தில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு வங்கி மோசடிகள் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குர்றம் சாட்டியுள்ளார்.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஏபிஜி ஷிப்யார்டு என்ற நிறுவனம் கப்பல் கட்டுதல் மற்றும் கப்பல் பழுதுபார்க்கும் தொழிலில் கடந்த 16 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.இந்தநிலையில் இந்நிறுவனம் 22,842 கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.இது நாடு முழுவதும் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்திள் தெரிவித்ததாவது:

மோடி ஆட்சியில் இதுவரை 5 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கி மோசடிகள் நடந்துள்ளன. கடந்த 75 ஆண்டுகளில் இப்படி ஒரு மோசடி நடந்ததில்லை. இந்த கொள்ளை மற்றும் மோசடி நிறைந்த நாட்கள், மோடியின் நண்பர்களுக்கு மட்டுமே நல்ல நாட்கள்.

-இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

லோன் வாங்கப் போறீங்களா? அதற்கு முன்பு இதை கொஞ்சம் படிங்க!

விமர்சனம் - அரண்மனை 4 - இது 'பழைய பல்லவி பாடும்' பேய் இல்லை… அதுக்கும் மேல! 

சம்மரில் உங்க காரை பராமரிக்க நச்சுனு சில டிப்ஸ்! 

'ஸிர்கேவாலே பியாஸ்'ஸிலிருக்கும் 8 ஆரோக்கிய நன்மைகள்!

ஏழைகளின் மலைப் பிரதேசம்... கல்வராயன் மலை..!

SCROLL FOR NEXT