ஸ்பெஷல்

சர்வதேச சிலம்பம் போட்டி: தங்கம் வென்ற கோமதிக்கு தமிழகத்தில் சிறப்பான வரவேற்பு!

கல்கி

சர்வதேச சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த விளக்கேத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் கோமதி. இவர், சிறுவயது முதலே சிலம்பம் கற்று பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி நேபாள் நாட்டில் சர்வதேச விளையாட்டு போட்டிகள் தொடங்கியது.

இதில், ஹாக்கி, கால்பந்து, குத்துச்சண்டை, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் இந்தியாவின் சார்பில் 70 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு 42 தங்கம்,17 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் பதங்களை வென்றுள்ளனர்.

இந்நிலையில் சர்வதேச சிலம்பப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி இன்று சொந்த ஊர் திரும்பும்போது, ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் மற்றும் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2024 கணிப்பு: வேதா கோபாலன்

கோரைக்கிழங்கு பிரசாதமாக தரும் கோயில் எது தெரியுமா?

தேவ மருந்து தவசிக்கீரை!

Bread Kulfi Recipe: பிரட் இருந்தால் போதும், வீட்டிலேயே செய்யலாம் சுவையான குல்பி!

இந்திய நேர மண்டலத்தால் சாதகமா? பாதகமா?

SCROLL FOR NEXT