ஸ்பெஷல்

3 மணி நேரம் தினமும் கரண்ட் கட்: பஞ்சாப் அரசு அறிவிப்பு!

கல்கி

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவும் நிலையில், பஞ்சாபில் தினமும் 3 மணிநேரம் கரண்ட் கட் செய்யப்படவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு மட்டுமே மின் விநியோகம் இருக்கும் என்றும், அதன் பின்னர் மாநிலம் இருளில் மூழ்கும் என்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்அத்துடன், பல்வேறு மாநிலங்களும் நிலக்கரி பற்றாக்குறையால் மின்தடைக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், மின் விநியோகத்துக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 'இனிமேல் நாள்தோறும் 3 மணி நேரம் கட்டாய மின்வெட்டு நடைமுறையில் இருக்கும் என்று பஞ்சாப் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பஞ்சாப் மாநில பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் இந்த 3 மணி நேரம் மின்வெட்டு என்ற அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் இனி மின்வெட்டு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுவதால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

அமைதியான சொர்க்கம் சக்ரதா (Chakrata) மலைவாசஸ்தலம்!

நறுக்... மொறுக்... காரம் ரெசிபிஸ்!

மாதுளம் பழத்தை விட அதன் தோல் மிகுந்த ஆற்றல்மிக்கதாமே!

வரப்போகுது பாகுபலி அனிமேஷன் வெப் சீரிஸ்: எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!

ஏழுமலையான் குடியிருக்கும் ஏழு மலைகள்!

SCROLL FOR NEXT