ஸ்பெஷல்

3 வேளை அன்னதான திட்டம்: தமிழக கோவில்களில் தொடங்கி வைத்தார் முதல்வர்!

கல்கி

தமிழக கோயில்களீல் தினமும் 3 வேளை அன்னதானம் வழ்ங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அந்த வகியில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் திருத்தணி, திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயில்களில், இத்திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டது.

காணொலி வாயிலாக நடைபெற்ற தொடக்க விழாவில் முதல்வருடன்  அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இத்திட்டம் குறித்து அரசு வெளீயிட்டுள்ள செய்திக் குறீப்பு:

இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் கோயில்களீல் தினமும் 3 வேளை அன்னதான்ம் வழங்கும் இத்திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 5 ஆயிரம் பேர் இத்திட்டம் மூலம் பயனடைவார்கள். அக்கோயிலில் 40 பணியாளர்கள் உணவு தயாரிக்கும் பணியில் சுழற்சி முறையில் ஈடுபடுவார்கள். கொரோனா விதிமுறைகளின்படி உணவு சாப்பிட வரும் பக்தர்களை சமூக இடைவெளியுடன் அமர வைத்து உணவு பரிமாறப்படுகிறது. அன்னதான திட்டத்தின் முதல் நாளான இன்று, சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், ஜாங்கிரி, வடை, பாயசம், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

-இவ்வாறு அரசுதரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிறுகதை - அகழாய்வில் ஓர் அதிசயம்!

வாங்க விமானத்தில் பறக்கலாம்!

ஹேர் கலரிங் பண்ணிக்கொள்ள ஆசையா? கவனிக்க வேண்டியது என்ன? எந்த வகையான கலரிங் நல்லது?

சிரித்து வாழ வேண்டும்!

உடலை இலகுவாக வைக்கும் ஆரோக்கிய உணவுகள்!

SCROLL FOR NEXT