ஸ்பெஷல்

அம்மா மினி கிளினிக்குகளால் எந்த பயனும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

கல்கி

கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் எந்த பயனும் இல்லாததால் மூடப்பட்டதாக தமிழக சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணீயம் தெரிவித்தார்.

.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கொரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

சென்னையில் கொரோனா தொற்றைக் கண்காணிக்க மண்டல வாரியாக மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் அறிகுறிகள் இல்லாமல் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் தங்கள் வீடுகளிலே சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாகவே ஏற்படுத்தப்பட்டது. அவற்றின் மூலம் எந்த பயனும் இல்லை என்பதால் அவற்றை மூட அரசு முடிவெடுத்தது. அம்மா மினி கிளினிக்கில் பணிபுரிந்த மருத்துவ பணியாளர்களுக்கு மார்ச் வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணீயம் தெரிவித்தார்.

யுவன் சங்கர் ராஜாவின் Independent Music Album வெளியீடு!

முதுமையை தள்ளிப்போடும் சூப்பர்ஃபுட் பழம் புளூபெர்ரி!

ரஷ்யா: ஐந்தாவது முறையாக மீண்டும் அதிபரானார் விளாடிமிர் புதின்!

இந்திய மக்களிடம் கோரிக்கை விடுத்த மாலத்தீவு அமைச்சர்!

6G தொழில்நுட்பம் வந்தால், ஸ்மார்ட் போன்களே இருக்காது… எல்லாம் சிப் தான்! 

SCROLL FOR NEXT