ஸ்பெஷல்

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி: முனீஸ்வர்நாத் பண்டாரி இன்று பதவியேற்பு!

கல்கி

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வரர் நாத்பண்டாரி இன்று ஆளுநர் மாளிகையில் பதவிஏற்றுகொண்டார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்து உத்தரவுபிறப்பித்தார்.

இதையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்த முனீஸ்வரர் நாத்பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் வகையில் நேற்று சென்னை வந்து சேர்ந்தார். இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முனீஸ்வரர் நாத் பண்டாரிக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக  ஆளுநர்ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையண்பு, சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சிதுணைத்தலைவர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முக்கியஅமைச்சர்கள் பங்கேற்றனர்.

வீட்டிலேயே செய்யலாம் விதவிதமாக குளு குளு குல்ஃபிஸ்!

நல்லவர் யார், கெட்டவர் யார் என்று கணிக்க இந்த 10 போதுமே!

அன்பான நேசிப்பில் மறையும் குறைகள்!

உலகின் மிகச் சிறிய மற்றும் அதிக விஷத்தன்மை கொண்ட தவளை எது தெரியுமா?

பொடுகுத் தொல்லையா? இதோ உங்களுக்காக பயனுள்ள எளிய குறிப்புகள்!

SCROLL FOR NEXT