FOAB - MOAB 
ஸ்பெஷல்

வெடிகுண்டுகளில் கூட தாய் தந்தை உண்டா என்ன?

தேனி மு.சுப்பிரமணி

Mother of All Bombs:

அமெரிக்க இராணுவத்தினால் தயாரிக்கப்பட்ட ஒரு பாரிய விளைவு வழக்கமான வெடிகுண்டான ஜிபியு-43/பி மாபெரும் பீரங்கி வான் வெடிப்பு (GBU-43/B Massive Ordnance Air Blast (MOAB)) எனும் வெடிகுண்டு, பொதுவாக அனைத்து வெடிகுண்டுகளின் தாய் (Mother of All Bombs) என அழைக்கப்படுகிறது. இதன் தயாரிப்புக் காலத்தில், இதுவே அணு ஆயுதங்களற்ற, அதிக சக்தி வாய்ந்த ஆயுதமாகக் காணப்பட்டது. இவ்வெடிகுண்டு சி-130, எம்சி-130 வகை வானூர்திகள் மூலம் விடுவிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது. 

இந்த வெடிகுண்டு 2017 ஏப்ரல் 13 ஆம் நாளில், ஆப்கானித்தானில் கொரோசான் மாகாணத்தில் இசுலாமிய அரசு தீவிரவாதிகளின் தளங்கள் மீது வீசப்பட்டது. 9,800 கிலோ எடையுள்ள 30 அடி நீள இக்குண்டை வீசி அமெரிக்கா நடத்திய தாக்குதலில், 90 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. 

Father of All Bombs:

அனைத்து வெடிகுண்டுகளின் தந்தை (Father of All Bombs) என்ற அடைப் பெயருடைய சக்தி அதிகரிக்கப்பட்ட வான்வியல் வெப்ப அழுத்த வெடிகுண்டு (Aviation Thermobaric Bomb of Increased Power) என்பது வான்வழியாக குண்டு வீச்சு விமானங்கள் மூலம் தரையில் செயற்படும் ரசியத் தயாரிப்பு வெப்ப அழுத்த ஆயுதமாகும். இவ்வாயுதத்தின் அழிவு சக்தி பற்றி குறிப்பிட்ட ரசிய ஆயுதப் படைகளின் அதிகாரி "உயிர்வாழும் அனைத்துமே சாதாரணமாய் ஆவியாகிவிடும்" என்றார். இது அமெரிக்க இராணுவத்தின் "அனைத்து வெடிகுண்டுகளின் தாய்" என அழைக்கப்படும் வெடிகுண்டினை விட நான்கு மடங்கு பலமுள்ளது. 

இதனால் இது வழக்கமான, அணு ஆயுதங்களற்ற உலகிலுள்ள ஆயுதங்களில் இதுவே மிகச் சக்தி வாய்ந்த ஆயுதமாகும். இருப்பினும், ரசியர்களின் உரிமை கொண்டாடும் ஆயுதத்தின் அளவு, சக்தி பற்றி அமெரிக்க பாதுகாப்பு ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இவ்வாயுதம் 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ரசிய இராணுவத்தின் கூற்றின்படி, இப்புதிய ஆயுதம் சில சிறிய வகை அணுக்குண்டுகளுக்கு மாற்றீடாக இருக்கிறது.

துணிந்தாருக்கு துக்கம் இல்லை!

இயற்கையிடம் சுறுசுறுப்பை கற்றுக் கொள்ளுங்கள்!

தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க!

வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கல் மட்டுமல்ல…

புடவைக் கட்டும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத 9 தவறுகள்!

SCROLL FOR NEXT