World Anti Drug Day 
ஸ்பெஷல்

ஜூன் 26 - சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு நாள் - போதை ஒரு வெற்று பாதை!

சுடர்லெட்சுமி மாரியப்பன்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 ஆம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் போதை பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது பற்றி சற்று சிந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த சமூகத்திற்கு அவசியமான ஒன்று. இது குறித்து ஐ.நா.சபை வெளியிட்ட அறிக்கையின் படி, உலகம் முழுவதும் 200 மில்லியன் நபர்கள் போதைப் பொருளை உபயோகிப்பது தெரியவந்துள்ளது. இந்த மில்லியன்களில் இளைஞர் பட்டாளாமே அதிகம். எனவே போதைப்பொருளுக்கு அடிமையாகும் இளைய தலைமுறையினரை இந்த பதிவு நோக்கமாக கொண்டுள்ளது.    

இன்றைய  மாணவர்கள் புத்தகம் எடுத்து படிக்க செல்லும் வயதில் பாட்டிலை எடுத்து குடிக்க செல்லும் காலமாக மாறி வருகிறது நம் சமூகம்... அதாவது பள்ளி சிறுவர்கள் கையில் மது, புகையிலை, சிகரெட், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள்... ஊடகங்களில் நாம் பார்க்கும் செய்திகளை காணும் போதே மனம் பதறுகிறது..... தன் பிள்ளைகளை பற்றி ஆயிரம் கனவுகளுடன் இருக்கும்  பெற்றோர்களையும், இந்த சமூகத்தையும் சீர்குலைக்கும் ஆபத்தான வழிகளில் செல்கின்றனர் இன்றைய இளம் பருவத்தினர். இவ்வாறு பள்ளி படிக்கும் வயதிலே இந்த மாணவர்கள் போதைக்கு அடிமையாக காரணம் என்னவாக இருக்க முடியும்? ஒரு முறை தொட்டு பார்க்கலாம் என்ற ஆசையா? போதை எப்படி இருக்கும் என்ற ஆர்வமா? நண்பன் சொன்னான் அதனால் சுவை பார்த்தேன் என்ற புரிதலின்மையா?

இந்த மாணவர்கள் இளமைப் பருவத்தில் தாங்கள் நடத்தும் அட்டகாசங்களைப் பற்றி சிந்திக்கிறார்களே தவிர அதனால் ஏற்படும் விபரீதங்களைப் பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை... இவ்வாறு விளையாட்டு போக்கில் அவர்கள் கொள்ளும் ஆசையும், ஆவலும் சில நேரம் அவர்களது அழிவுக்கே காரணமாகி விடுகின்றது... நான் அறிந்த ஒரு சிறுவனை பற்றி கூறுகிறேன்...கேளுங்கள்!  (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

அவன் பெயர் முகிலன். படிப்பில் நல்ல திறமை வாய்ந்தவன். ஒரு முறை முகிலன் பத்தாம் வகுப்பு படிக்கும் போது விடுமுறை நாள் அன்று அவன் நண்பர்களோடு விளையாட சென்றிருந்தான்.... அப்போது சிறிது நேரம் நண்பர்களுடன்  மட்டைப்பந்து விளையாடிவிட்டு, அவர்களுடன்  சேர்ந்து தோப்புக்கு சென்று மகிழ்ச்சியாக கிணற்றில் ஒரு குளியல் போட்டான். பின்பு அனைவரும் வாங்கி வந்த, சிக்கன் பிரியாணியை சாப்பிட தயாராகினர். திடீரென்று ஒருவன் சர்ப்ரைஸ் என்று ஒரு மதுபானத்தை காட்டினான். அனைவரும் முதலில் கொஞ்சம் பதறினாலும், அடுத்த நிமிடம் அதை சுவைக்க விரும்பினர். முகிலனின் மன நிலையையும் மாற்றி அனைவரும் மதுபானத்தை அருந்தினர்.... அதுதான் அவன் வாழ்கையில் சறுக்கி விழுந்த முதல் தருணம்... இன்று வரை அந்த குழியில் இருந்து எழுந்த பாடில்லை... இதனால் அவன்  வாழ்க்கையே சொல்ல முடியாத இருளாக மாறியது.. இது போல் இன்னும் எத்தனை முகிலனுடைய வாழ்க்கை இருளடைந்ததோ?

போதை

'உலகை மறக்கும் சில நிமிடம்

உணர்வை இழந்து - நீ

அதில் மேல்  கொள்ளும் மோகம்

எமன் உன் மேல் கொள்ளும் தாகத்திற்கு சமம்' ....

avoid drugs

போதை என்பது தண்ணீர் இல்லாத கிணறு போன்றது. ஒரு முறை விழுந்தால் உயிர் பிழைப்பது கடினம்... அதிலும், பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாவது என்பது மிக மிக கொடுமையான ஒன்று... பொதுவாகவே பிள்ளைகள், மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் போதைக்கு அடிமையாகும்போது குடும்பத்திலும் சமூகத்திலும் பல்வேறு பிரச்சினைகள் உருவாகின்றன... அவர்கள் வாழ்க்கை அவர்களாலே நாசமாகின்றது...

இவ்வாறு போதைக்கு அடிமையான சிறுவர்களை திருத்துவதும் கடினமான ஒன்றுதான்... ஏனெனில், போதைதான் ஒருவனை வன்முறையில் இறங்க வைக்கும் முதல் பாதை... இதனால் சொந்த வீட்டிலேயே திருடுதல், பொருட்களை எடுத்து அடகு வைப்பது, பிறரை துன்புறுத்துவது, பிச்சை எடுப்பது, அசிங்கமாக நடந்து கொள்வது, போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் வெளியிடங்களில் அடிதடி, கொலை, கொள்ளை, தீவிரவாதம் மற்றும் பாலியல் தொந்தரவுகள் செய்வது என பல தீய வழிகளில் சென்று சமூகத்தை நிலைகுலைய செய்கின்றனர்...

போதைக்கு அடிமையானவர்களை மீட்பதும் அவ்வளவு எளிதல்ல.. போதைக்கு அடிமையாகும் நபர்களை மென்மையாக தான் வழிநடத்த வேண்டும். அதனால் அன்பான முறையில் அவர்களிடம் அதற்கான விளைவுகளை எடுத்து கூறி அவர்களை அந்த பழக்கத்திலிருந்து வெளி கொண்டுவர வேண்டும்... இது தொடர்பான பல விழிப்புணர்வுகளை அவர்களுக்கு அளிக்க வேண்டும். முக்கியமாக அவர்களை அதிலிருந்து மீட்பதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் போதை மீட்பு மையங்களின் உதவியையும் அணுக தயங்க கூடாது....

நித்திய சொர்க்கவாசல் உள்ள கலியுக வேங்கடேச பெருமாள் கோயில் தெரியுமா?

தோஷங்கள், பாவங்கள் போக்கும் பாப விமோசனப் பெருமாள்!

உலகின் எந்தப் பகுதிகளில் பறவைகளை அதிகம் பார்க்க முடியும்!

ஐஸ்கிரீமின் வரலாறு என்ன தெரியுமா? 

ஆயில் இல்லாமல் சமைப்பது ஆரோக்கியம் தருமா?

SCROLL FOR NEXT