ஸ்பெஷல்

14 மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை;  சென்னை வானிலை மையம்!

கல்கி

தமிழக பகுதிகளின் மேலடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக,இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

-இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது;

தமிழகத்தில்தென்காசி,ஈரோடு,கிருஷ்ணகிரி,தர்மபுரி,சேலம்,திருப்பத்தூர்,வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை:

வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

மேலும்,குமரிக்கடல்,மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்சூறாவளிக் காற்று  வீசக்கூடும்.இலட்சத்தீவு, கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதி சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதையடுத்து தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும்.

அதைப்போல,தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று கெட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

-இவ்வாறு சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மன அமைதி தரும் பாத்ரூம் - ஆய்வு கூறும் செய்தி! தவறுதலாக நினைக்க வேண்டாம்...

WhatsApp-ல் திருமண அழைப்பிதழ் வந்தால் தெரியாமல் கூட திறந்துடாதீங்க! 

ஆண்களின் Sperm Count அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

சோயா பனீர் பிரியாணி செய்யலாம் வாங்க! 

காஃபின் கலந்திருக்கும் காபி தெரியும்; ‘டீகாஃப்’ என்றால் என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT