ரயில்களில் அளவுக்கு அதிகமாக எக்ஸ்ட்ரா லக்கேஜ் எடுத்து கொண்டு வந்தால், அந்த உடமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-இதுகுறித்து இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்ததாவது;
ரயிலில் ஏசி முதல் வகுப்பில் பயணிக்கும் பயணிகள் தங்களுடன் 70 கிலோ லக்கேஜ் கொண்டு செல்லலாம். மேலும் ஏசி 2 டயர் படுக்கை வசதியில் பயனிக்கும்போது 50 கிலோவும், ஏசி 3 டயர் படுக்கை மற்றும் ஏசி இருக்கை வகுப்பில் 40 கிலோவும், 2-ம் வகுப்பில் 40 கிலோவும் உடமைகளை எடுத்து செல்ல அனுமதி உண்டு. இந்த நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு உடமைகள் கொண்டு செல்வதாக இருந்தால் பார்சல் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் பார்சல் சர்வீஸ் கட்டணத்தை விட ஆறு மடங்கு அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
-இவ்வாறு இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.