ஸ்பெஷல்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய மாணவி!

கல்கி

தமிழகம் முழுவதும் இன்று 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், திருப்பூரில் ரிதன்யா என்ற மாணவி அறுவைசிகிச்சை முடித்து ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதிய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.

திருப்பூர் குப்பாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ரிதன்யா என்ற மாணவி திருப்பூர் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஞாயிறன்று ரிதன்யாவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு வயிற்றில் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு, 2 நாட்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரிதன்யா எழுத விரும்ப, மருத்துவர் அறிவுரையின் பேரில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அந்த மாணவி கொண்டு வரப்பட்டார். அதையடுத்து  செவிலியர்கள் உதவியுடன் ரிதன்யா தேர்வு எழுதியது அனைவரையும் நெகிழச் செய்தது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT