ஸ்பெஷல்

நடிகர் விஜய் படங்களைப் பார்க்காதீங்க; மதுரை ஆதீனம் அறிவிப்பு!

கல்கி

மதுரையிலுள்ள  பழங்காநத்தத்தில் இன்று விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற துறவிகள் மாநாட்டில் மதுரை ஆதீனம், கோவை காமாட்சி ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில் மதுரை ஆதீனம் பேசியதாவது;

பாரதியார் இப்போது உயிருடன் இருந்தால் `செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே' என்று பாடியிருப்பார். அந்தளவுக்கு மாநிலத்தில் மதுக்கடைகள் அதிகரித்துள்ளது. கோயில்களுக்குள் அரசியல் புகுந்துவிட்டது.கோயில் நகைகளை உருக்குவதாகச் சொல்கிறார்கள். ஆனால் எங்கு உருக்குகிறார்கள் என்பதே தெரியவில்லை.

திராவிட பூமி என்று சொல்லிக்கொண்டு இறந்தவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். கோயில் நம்மைவிட்டு போனால் நமது சமயமும் நம்மை விட்டு போய்விடும். கோயில் இடங்களை அரசியல்வாதிகள் கைப்பற்றியுள்ளனர். கோயில் நிலத்துக்கு குத்தகை கேட்டால் குத்த வருகிறார்கள். இன்னும் இலவசமாக கோவணமும் திருவோடும் கொடுக்கும் திட்டத்தை மட்டும் பாக்கி வைத்துள்ளது திராவிட கட்சிகள்.`திராவிட பாரம்பரியம்' என்று சொல்லும் அரசியல்வாதிகள் விபூதி பூச மறுக்கிறார்கள். ஆனால் ரம்ஜான் என்றால் குல்லா போட்டுக்கொள்கிறார்கள். அறநிலையத்துறை பொல்லாத துறையாக உள்ளது. அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாரமாக திருக்கோயில்கள் உள்ளன. அறநிலையத்துறையைக் கலைத்துவிட வேண்டும், கோயில்கள் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இயங்க வேண்டும்.

'சாமியார்கள் யாசகம் பெற்று சாப்பிட வேண்டும்' என கூறிய மதுரை எம்.பி சு.வெங்கடேசன் என்னுடன் ஒரு வாரம் தங்கி இருந்தால் சுருண்டு போய் விடுவார். இந்துக்களை அவமதிக்கும் வகையில் திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜய்யின்  திரைப்படங்களைப் பார்க்காதீர்கள். சாலமன் பாப்பையாவை பல்லக்கில் தூக்கினால் சரியானது.. தருமபுரம் ஆதீனத்தைப் பல்லக்கில் தூக்கினால் தவறா? என்ன சார் உங்க நியாயம்?!

-இவ்வாறு மதுரை ஆதீனம் பேசினார்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT