ஸ்பெஷல்

மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு செல்லும்; சென்னை உயர்நீதிமன்றம்!

கல்கி

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு செய்து சட்டம் கொன்டு வரப்பட்டது. இந்நிலையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கியஅமர்வு தீர்ப்பு வழங்கினர். அத்தீர்ப்பில் தெரிவிக்கப் பட்டதாவது:

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட சட்டம் செல்லும்.  இந்த 7.5% உள் ஒதுக்கீடு என்பது மொத்தமுள்ள 69% சதவீத இடஒதுக்கீட்டுக்குள்தான் வரும் என்று தமிழக அரசு தரப்பில் முன்வைத்த வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5% உள் ஒதுக்கீட்டை 5 ஆண்டுகளுக்கு பிறகு மறு ஆய்வு செய்ய வேண்டும்.

-இவ்வாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

சேதமடைந்த மரப்பொருட்கள்... குப்பைகளாக உங்கள் வீட்டில் உள்ளதா? அச்சச்சோ தவறாச்சே...!

குரு நானக் அருளிய அற்புதமான நல் உரைகள்!

சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள் ஒருகாலத்தில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களாம்!

கம்பவுன்டர்களை காணவே முடிவதில்லையே; யார் இவர்கள்? எங்கே போனார்கள்?

ஐயப்பன் தரிசனம் கார்த்திகை மாதத்தில் மட்டும்தானா?

SCROLL FOR NEXT