ஸ்பெஷல்

வங்கிக் கடனுக்கு ரெப்போ வட்டி அதிகரிப்பு!

கல்கி

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப் படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

-இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்ததாவது;

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் மும்பையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பணவீக்கம் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்த புதிய ரெப்போ வட்டி விகிதம் உடனடியாக அமலுக்கு வருகிறது.

-இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மணக்கோலத்தில் காட்சி தரும் சிவபெருமான் அருளும் திருத்தலம் எங்குள்ளது தெரியுமா?

கோடைக்கால அலர்ஜிகளுக்கு குட்பாய் சொல்லுங்கள்!

எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியம் தெரியுமா?

மாணவர்களுக்கான சிறந்த 6 AI கருவிகள்!

Beehive Ginger: இது இஞ்சி இல்ல ஷாம்பூ… என்னடா சொல்றீங்க?

SCROLL FOR NEXT