ஸ்பெஷல்

ஹர்திக் பாண்டியா அபாரம்! 

கல்கி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் தொடர்ந்து இதுவரை டி20 கிரிக்கெட் ஆட்டங்களில் 13 முறை வென்ற கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார் ரோஹித் சர்மா.

இங்கிலாந்தின் சவுதம்டனில் நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில்  பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து கேப்டன் ரோஹித் சர்மாவும் இஷான் கிஷனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

ரோஹித் 24 ரன்களும், இஷான் கிஷன் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நிதானமாக விளையாடினர். பின்னர் அவர்களும் ஆட்டமிழக்க, ஹார்திக் பாண்டியா களம் இறங்கி 50 ரன்கள் குவித்தார்.அதையடுத்து 20 ஓவர்களில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது.

அடுத்து கல்மிறங்கிய இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மொயீன் அலி 36 ரன்களும், ஹாரி ப்ரூக் 28 ரன்களும் எடுத்தனர். ஹார்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

மேலும் இதையடுத்து இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹார்திக் பாண்டியாவுக்கு  ஆட்டநாயகன் விருது கிடைக்கப் பெற்றது. 

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

SCROLL FOR NEXT