ஸ்பெஷல்

15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தீவிரமாகும் அசானி புயல்!

கல்கி

தென்கிழக்கு வங்கக்கடலில் அசானி புயல் உருவாகியுள்ளதையடுத்து தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்ததாவது;

வங்கக் கடலில் உருவான அசானி புயல் தீவிர புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நிலையில், நாளை ஆந்திரா, ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப் படுகிற்து. இந்நிலையில் புதுச்சேரி,  காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று டெல்டா உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதன்படி, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோவை, கடலூர், தேனி, திண்டுக்கல், காரைக்கால், புதுவை, திருப்பூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை, ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

-இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT