ஸ்பெஷல்

கதறி அழுத கவர்னர்: காரணம் என்ன?

கல்கி

திருச்சியில் இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம கோபாலன் நினைவிடத்துக்குச் சென்ற மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன், அவரது நினைவால் கதறி அழுத சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக-வின் மூத்த தலைவர்களுல் ஒருவரான இல.கணேசன் தற்போது மணிப்பூர் மாநில கவர்னராக உள்ள நிலையில், தமிழகம் வந்த அவர் நேற்று மாலை திருச்சியில் இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். 

அந்நிலையில் அங்கு வைக்கப் பட்டிருந்த ராமகோபாலன் உருவப் படத்தை பார்த்ததும் இல.கணேசன் கதறி அழுதார். இதையடுத்து அங்கிருந்த இந்து முன்னணி நிர்வாகிகள் அவரை ஆசுவாசப்படுத்தி அழைத்து சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், ராமகோபாலனின் நினைவுகள் தன்னைக் கலங்க செய்ததாகத் தெரிவித்தார். பின்னர் அவரிடம் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைப் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தான் ஆளுநர் பதவி வகிக்கும் நிலையில் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு தன்னால் பதிலளிக்க இயலாது என்று இல.கணேசன் கூறிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Jeff Bezos-ஐ கோடீஸ்வரன் ஆக்கிய விதி என்ன தெரியுமா? 

முகத்தை மூடித் தூங்குபவரா நீங்கள்? அச்சச்சோ போச்சு!

குளிர்காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்!

முகம் ஒரு ஓவியம் என்றால், உதடுகள் அதன் இதயம்!

மரங்களைப் பற்றி மனிதர்கள் ஏன் கவலைப்படுவதில்லை?

SCROLL FOR NEXT