ஸ்பெஷல்

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கல்கி

தமிழகத்தில் நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் நாகப்பட்டினம்,மயிலாடுதுறை,திருவாரூர்,தஞ்சாவூர், அரியலூர்,புதுக்கோட்டை,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும்,தமிழகக் கடற்கரை,குமரி பகுதி,மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

-இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒன்பது வாசல் கடந்து மூலவரை தரிசிக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

Type 1 Diabetes: இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

பலாக் கொட்டையின் வியக்க வைக்கும் அற்புதப் பலன்கள்!

மகாராஷ்திராவின் பெருமையாகக் கருதப்படும் Puneri pagadi தலைப்பாகை!

SCROLL FOR NEXT