ஸ்பெஷல்

அதிமுக-வில் களேபரம்: 144 தடையுத்தரவு!

கல்கி

சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப் பட்டார். 

இக்கூட்டத்தில் 16 தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. மேலும் அடுத்த 4 மாதத்துக்குள் கட்சியின் நிரந்தர பொதுச் செயலரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கிய நிலையில்,  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர்..

அங்கு ஓபிஎஸ், மற்றும் இபிஸ் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்த  ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டு ஓபிஎஸ் வாகனத்தில் ஏற்றியதாக சொல்லப் படுகிறது. 

அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடந்து வரும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப் படுகிறது. .அங்கு பரபரப்பான சூழல் காணப்படுவதால், அதிமுக தலைமை அலுவலகம் அருகே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

சேதமடைந்த மரப்பொருட்கள்... குப்பைகளாக உங்கள் வீட்டில் உள்ளதா? அச்சச்சோ தவறாச்சே...!

குரு நானக் அருளிய அற்புதமான நல் உரைகள்!

சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள் ஒருகாலத்தில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களாம்!

கம்பவுன்டர்களை காணவே முடிவதில்லையே; யார் இவர்கள்? எங்கே போனார்கள்?

ஐயப்பன் தரிசனம் கார்த்திகை மாதத்தில் மட்டும்தானா?

SCROLL FOR NEXT