ஸ்பெஷல்

இலங்கையின் புதிய பிரதமர்: பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்கே!

கல்கி

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தன் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார் ரணில் விக்கிரமசிங்கே. இப்பதவியை இவர் 6-வது முறையாக ஏற்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியினால் மகிந்த ராஜபக்சே தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் பெயர் பரிந்துரைக்கப் பட்டது. ஆனால் அவர் தான் பிரதமர் பதவியை ஏற்றால், அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்தாக வேண்டும் என நிபந்தனை விதித்தார் சஜித். இதனான் சஜித் பிரேமதாசா நிராகரிக்கப் பட்டார்.

இந்நிலையில் அந்நாட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் பிரதமராக இன்று பதவியேற்றார். இலங்கையில் 6-வது முறையாக ரணில் விக்கிரமசிங்கே பிரதமராகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது கட்சிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் இப்போது ஒரேயொரு எம்.பி.மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

யார் இந்த ஆரோக்கிய ராஜீவ்? தடகளத்தில் இவரின் சாதனைகள் என்னென்ன?

அதிகமாக மீன்பிடிப்பதால் இவ்வளவு பாதிப்புகளா? 

இரண்டு பிரம்மாண்டங்கள் மோதுகின்றன!

ஆரோக்கிய விஷயத்தில் அற்புதங்கள் செய்யும் ஆரஞ்சு ஜூஸ்!

வாடிவாசல் குறித்து மனம் திறந்த வெற்றிமாறன்… பாராட்டிய மிஷ்கின்!

SCROLL FOR NEXT