ஸ்பெஷல்

ரூ. 36 லட்சத்தில் குறவர் மக்களுக்கு அடிப்படை வசதிகள்: ஆவடியில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

கல்கி

சென்னை ஆவடி மற்றும் திருமுல்லைவாயலில் குறவர் இனமக்களுக்கு ரூ. 36 லட்சத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்ததை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

சென்னை திருமுல்லைவாயிலில் குறவர் மக்களை நேரில் சென்று சந்தித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன் உரையாடி, தேநீர் அருந்தினார். மேலும் அப்பகுதி குறவர் இன மக்கள் குடியிருப்பில் மரக்கன்றை நட்டு வைத்தார். குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டைகள், முதியோர் உதவித் திட்டத் தொகை உதவிகளை வழங்கினார். ரூ.36 லட்சம் மதிப்பில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த முதலமைச்சருக்கு குறவர் இன மக்கள் நன்றி தெரிவித்தனர்.

கடந்த மாதம் ஆவடி பகுதியில் நரிக்குறவர் இனைத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதனை தொடர்ந்து அவர்களிடம் வீடியோ கால் மூலம் பேசிய முதல்வர், அவர்களது பகுதிக்கு நேரில் வருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதையடுத்து இன்று ஆவடி பகுதியில் உள்ள குறவர் இன மக்களை சந்தித்துப் பேசினார். அந்த பகுதி மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப அங்கு அமைக்கப்பட்டுள்ள அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, தெருவிளக்குகள், உயர்மின் கோபுரம், சாலை வசதி, கழிப்பிட வசதி ஆகியவற்றை முதல்வர் நேரில் ஆய்வு செய்தார்.

குழந்தைகள் தர்பூசணி பழம் சாப்பிடலாமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

குறைவான வருமானம்; நிறைவான வாழ்க்கை!

30 வயதிற்கு மேற்பட்ட பெண்ணா நீங்கள்? இதோ உங்களுக்கான சருமப் பராமரிப்பு குறிப்புகள்! 

பாராமதி தொகுதியில் மோதும் பவார் குடும்பத்து மகளும், மருமகளும்!

முருங்கைக்காய் மற்றும் முருங்கைப்பூ ரெசிபிஸ்!

SCROLL FOR NEXT