ஸ்பெஷல்

கவலைப் படாதே சகோதரா; விராட் கோலிக்கு பாபர் ஆஸம்!

கல்கி

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சொற்ப ரன்னுக்கு பெவிலியன் திரும்பிய விராட் கோலிக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் ஆறுதல் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டானாக இருந்த விராட் கோலி சமீபகாலமாக அவுட் ஆப் ஃபார்மில் இருக்கிறார். இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் விராட் கோலி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 25 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 16 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இதனால் விராட் கோலிக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் தன் டிவிட்டரில் விராட் கோலிக்கு ஆதரவாக இன்று பதிவிட்டது வைரலாகியுள்ளது  அதில் கோலியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை போட்டு, அத்துடன் "கவலைப்படாதே சகோதரா.. இதுவும் கடந்து போகும். தைரியமாக இருங்கள் விராட்" என எழுதியுள்ளார்

இந்தப் பதிவு லட்சக்கணக்கானோரால் ரீ ட்வீட் செய்யப்பட்டு வருகிறது.

பல்லிகள் இங்கு சத்தமிடுவதில்லை; கருடன் வானில் பறப்பதில்லை! எங்கு தெரியுமா?

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

SCROLL FOR NEXT