ஸ்பெஷல்

பிரபல நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்!

கல்கி

தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் பிரபல நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் (69) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனது இல்லத்தில் இன்று காலை 8 மணிக்கு காலமானவர்.

பிரதாப் போத்தன் தமிழ், மலையாளம், தெலுங்கு என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 'மூடு பனி' திரைப்படத்தில் அவர் நடிப்பில் இடம்பெற்ற 'என் இனிய பொன் நிலவே' மிகப் பிரபலம். மேலும் தமிழில் வெற்றி விழா, லக்கி மேன், மகுடம் என பல வெற்றிப் படங்களை படங்களை இயக்கியுள்ளார்.

அவர் இறுதியாக 'கமலி பிரம் நடுக்காவேரி' படத்தில் ஓய்வுபெற்ற பேராசியராக நடித்திருந்தது அனைவராலும் பாராட்டிப் பேசப்பட்டது. மேலும் அவர் சிறந்த நடிகருக்கான ஃபிலிம் பேர் விருது, சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம் பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக பிரதாப் போத்தன் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதாப் போத்தன் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

SCROLL FOR NEXT