ஸ்பெஷல்

6 லட்சம் மாணவர்களுக்கு 3 மாதத்தில் இலவச சைக்கிள்; தமிழக அரசு!

கல்கி

தமிழகத்தில் அரசுப் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மாதத்துக்குள் சைக்கிள்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் தெரிவித்ததாவது;

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின்கீழ், 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 சைக்கிள்கள் கொள்முதல் செய்ய கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி ஒப்பந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் கலந்து கொண்ட தகுதியான சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களின் விலைப் புள்ளிகள் திறக்கப்பட்டு, கொள்முதல் குழு மூலம் விலைகுறைப்பு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அதையடுத்து சைக்கிள்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டதும் விரைவில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 சைக்கிள்கள் கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இன்னும் 3 மாத காலத்துக்குள் அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு  மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும்.

-இவ்வாறு தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடைகாலத்தில் சருமம் அழகு பெற சில டிப்ஸ்!

மனித வாழ்வில் விளைவுகளை ஏற்படுத்தும் இரண்டு விதமான சிந்தனை அமைப்புகள்!

தினம் ஒரு புதிர்: உங்கள் பார்வை கூர்மையாக உள்ளதா? முடிந்தால் மறைந்துள்ள எழுத்தை கண்டுபிடியுங்கள்!

தீப திரிகளின் வகைகளும்; பயன்களும்!

அருகி வரும் அரியக் கலை தெருக்கூத்து!

SCROLL FOR NEXT