ஜப்பானின் ஃபுக்குஷிமா அருகே ஆழ்கடலில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இந்தியாவின் லடாக் பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் குறித்து அந்நாட்டு வானியல் முகமை தெரிவித்ததாவது:
ஜப்பானின் ஃபுக்குஷிமா அருகே ஆழ்கடலில் நேற்றீரவு 60 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக ஃபுக்குஷிமாவில் உள்ள கட்டடங்கள் சேதமடைந்ததுடன், தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சிலர் உரிழிந்த்தாகவும் 80-க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தால் சுமார் 20 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
-இவ்வாறு ஜப்பான் வானியல் முகமை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் லடாக் பகுதியிலும் நேற்று இரவு 7.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், அது சில விநாடிகள் வரை நீடித்ததாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமி மட்டத்தில் இருந்து 110 கிலோ மீட்டர் ஆழத்தில், அட்சயரேகையில் 36.01 டிகிரி கோணத்தில், தீர்க்கரேகையில் 75.18 டிகிரி கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.