இன்று பங்குச் சந்தையில் எல்ஐசி–யின் பங்கு விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு ரூ.42,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய பங்கு சந்தை முதலீட்டாளர்கள் தெரிவித்ததாவது:
இன்று தேசிய பங்கு சந்தையில் முதல் நாளாக எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகள் விற்பனைக்கு வந்தன. இந்நிலையில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு எல்ஐசி-யின் ஒரு பங்கு ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த விலையைக் காட்டிலும் 9 சதவீதம் விலை குறைத்தே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.
ஒரு பங்கு ரூ.867 என்ற அளவில் முதல் நாளில் விற்பனைக்கு வந்தது. இதனால், எல்ஐசி பங்குகளின் விலை மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், ரூ.5.57 லட்சம் கோடியாக சரிவை சந்தித்துள்ளது. இதனால் எல்ஐசி பங்குகளில் முதலீடு செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
எல்ஐசி பங்குகள் விற்பனை செய்ததன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.21,000 கோடி லாபம் கிடைத்துள்ளது. அதே வேளையில், சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய பிறகு, 700 புள்ளிகள் உயர்ந்தும் கூட, எல்ஐசி பங்குகள் விலை உயராததால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.