ஸ்பெஷல்

மிஸ்.கூவாகம் போட்டி: சென்னையைச் சேர்ந்த மெகந்திக்கு முதல் பரிசு!

கல்கி

விழுப்புரத்தில் நேற்று மாலை திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி நடைபெற்றது. இதில் 'மிஸ்' கூவாகமாக சென்னையை சேர்ந்த மெகந்தி என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் தற்போது சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் வந்துள்ளனர்.

இதையடுத்து நேற்று இந்த திருநங்கைகள் பங்கேற்ற 'மிஸ்.கூவாகம்' அழகிப் பட்டத்துக்கான ஆரம்ப கட்டப் போட்டி விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த போட்டியின் இறுதிச்சுற்று, விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான  7 பேரிடம் பொது அறிவுத்திறன் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.

இதில் சிறந்த முறையில் பதில் அளித்த சென்னையை சேர்ந்த மெகந்தி என்பவர் மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். திருச்சியை சேர்ந்த ரியானா சூரி 2-ம் இடத்தையும், சேலத்தை சேர்ந்த சாக்‌ஷி ஸ்வீட்டி 3-ம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

கோடைகாலத்தில் சருமம் அழகு பெற சில டிப்ஸ்!

மனித வாழ்வில் விளைவுகளை ஏற்படுத்தும் இரண்டு விதமான சிந்தனை அமைப்புகள்!

தினம் ஒரு புதிர்: உங்கள் பார்வை கூர்மையாக உள்ளதா? முடிந்தால் மறைந்துள்ள எழுத்தை கண்டுபிடியுங்கள்!

தீப திரிகளின் வகைகளும்; பயன்களும்!

அருகி வரும் அரியக் கலை தெருக்கூத்து!

SCROLL FOR NEXT