ஸ்பெஷல்

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா: 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

கல்கி

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று  மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷன் இதுகுறித்து எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டதாவது;

டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று சமீபகாலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது கன்டறியப் பட்டுள்ளது. இம்மாநிலங்களில் கடந்த  2 மாதங்களாக பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்த நிலையில்,இப்போது மீன்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த வாரம் தினமும் ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தலைநகர் டெல்லியில் 1.42% என்றிருந்த  கொரோனா பரவல், தற்போது 3.49% ஆக உயர்ந்துள்ளது. எனவே இம்மாநிலங்களில் கொரோனாவை பாதிப்புகளை தீவிரமாக கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.

-இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துதல், பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், தடுப்பூசி போடும் பணிகளை விரிவுப்படுத்துதல் போன்றவற்றை பின்பற்றுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT