ஸ்பெஷல்

மின்னல் தாக்கி 17 பேர் பலி!

கல்கி

பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 17 பேர் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் கனமழை பெய்துவரும் நிலையில், மின்னல் தாக்கியதில் பல மாவட்டங்களில் மக்கள் சிலர் உயிரிழந்தனர்.

பீகாரில் பகல்பூர் மாவட்டத்தில் 6 பேர், வைஷாலி மாவட்டத்தில் 3 பேர், பாங்கா, ககாரியா மாவட்டங்களில் தலா 2 பேர், முங்கர், மாதேபுரா மற்றும் கதிஹார் மாவட்டங்களில் ஒருவர் என ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், தலா 4 லட்ச ரூபாய் நிவாரணமும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்ததாவது;

பீகாரில் மோசமான காலநிலையில் மக்கள் முழு விழிப்புடன் இருக்க வேண்டும். இடியுடன் கூடிய மழையைத் தடுக்க அவ்வப்போது பேரிடர் மேலாண்மை குழு வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்றவும் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். மோசமான வானிலையில் வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.

இவ்வாறு முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT