ஸ்பெஷல்

#BREAKING; ஹெராயின் வழக்கு; தமிழகத்தில் என்ஐஏ சோதனை!

கல்கி

கேரளாவில் ஹெராயின் மற்றும் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட வழக்கு தொடர்பாக தமிழகத்தில் பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

–இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சார்பில்  தெரிவித்ததாவது:

கேரளாவில் 300 கிலோ ஹெராயின் மற்றும்  ஏகே 47 துப்பாக்கிகள் சிக்கிய வழக்கில் தமிழகத்தில் 20 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் 9 இடங்களிலும் , திருச்சியில் 11 இடங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மத்திய சிறை, சென்னையில் மண்ணடி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட் ஒன்றிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. 

முன்னதாக இன்று காலை முதல் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக என்ஐஏ எஸ்.பி தர்மராஜன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்களுடன் சோதனை நடைபெற்று வருகிறது. போதைப்பொருள் கடத்தல் குறித்து டெல்லி அதிகாரிகள் பதிவு செய்துள்ள வழக்கு தொடர்பாக திருச்சி மத்திய சிறையில் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தது.

– இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

சமூக வலைதளங்களின் நன்மை, தீமைகள் தெரியுமா உங்களுக்கு?

உலகிலேயே மிகச்சிறிய நுழைவாயில் கொண்ட அதிசய சிவன் கோயில்!

உறையும் அதிசய நீர்வீழ்ச்சி இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?

Vasuki Indicus: 47 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய பாம்பு!

தன்னம்பிக்கை வளர நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT